சிங்கப்பூர் முன்னேறிய நாடு மற்றும் வேலை செய்வதற்கு பாதுகாப்பான நாடு என்பது வரும் அறிந்த ஒன்றுதான்.ஆனால் பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் சிங்கப்பூரிலும் நடைபெற்று தான் வருகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலாக இளைஞர்களை குறி வைக்கும் தவறான பாலியல் சேவைகள் சிங்கப்பூரில் அதிகமாக உள்ளன என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது .
சிங்கப்பூரை பொறுத்தவரை குடும்ப சூழ்நிலைக்காக அங்கு தங்கி குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களே ஏராளம். அப்படி இருக்கும் பொழுது இம்மாதிரி ஏமாற்றுப் பேர்வழிகளை நம்பி பணத்தை இழக்காமல் இருப்பதே புத்திசாலித்தனமாகும். விரைவில் பணம் சம்பாதிப்பதற்காக சிங்கப்பூரில் இள வயதுடைய ஆண் மற்றும் பெண் இருவரும் சேர்ந்து பாலியல் சேவை வழங்குவதாக telegram வழியாக 20 பேருக்கும் மேலான இளைஞர்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது .
இருவரும் சேர்ந்து சுமார் 1500 டாலருக்கும் மேலான பணத்தை ஏமாற்றி உள்ளனர் .இதில் ஆணிற்கு 19 வயது மற்றும் பெண்ணிற்கு 17 வயது என்பது அதிர்ச்சிக்குரிய விஷயமாகும். Telegram வழியாக இணையதில் இருந்து எடுத்த தவறான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க முடிவு செய்துள்ளனர்.
பல்வேறு பாலியல் சேவைகளை வழங்குகின்றோம் என்று கூறி முதலில் மெசேஜ் செய்யும் நபர்களிடம் 50 டாலர் வரை பணத்தை அனுப்புமாறு கூறுகின்றனர். பணத்தை தந்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அடுத்த நபருக்கு குறி வைக்கின்றனர்.அதற்கு மீறி நேராக வந்து சந்திக்க விரும்பும் நபர்களிடம் ஆயிரம் டாலர்களை பணம் வாங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது. சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்திய இளைஞர்களே இது போன்ற சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்.