சிங்கப்பூரில் இந்த நோய் பரவல் காலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு இடையே புதிதாக 140க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த சில உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையின்போது தான் உடற்பயிற்சி கூடங்களில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்ததாக Bespoke பிட்னஸ் உடற்பயிற்சிக்கூடம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமானோர் உறுப்பினர் ஆவதற்கு முன்பதிவு செய்து வருவதாக Body Fit Training நிறுவனம் கூறியுள்ளது.
இந்த கொரோனா கலகட்டத்தில் மக்கள் தங்களுடைய உள்ளம் மற்றும் உடல் நலனை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.