TamilSaaga

தவறாக நடந்துகொண்டதால் திட்டினாரா வெளிநாட்டு பணிப்பெண்?.. நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த முதியவர் – எப்படி இறந்தார்? சிங்கப்பூர் Magistrate விளக்கம்

சிங்கப்பூரில் தனது வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் ஒருவர் அன்று நள்ளிரவில் நடைபயிற்சிக்குச் சென்றுள்ளார்.

அதன் பிறகு அவர் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 13) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், மரண விசாரணை அதிகாரி கிறிஸ்டோபர் கோ, இறந்த திரு. டேயின் மரணம் ஒரு கொலை அல்ல என்றும் எதிர்ச்சியாக நடந்தது என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது : சம்பவத்தின்போது கனமழை பெய்து என்றும், தரை முழுவதும் ஈரமாக இருந்துள்ளது என்றும் கூறினார். இறந்தவர் மன உளைச்சலில் இருந்ததால் அவர் எங்கு செல்கிறோம் என்பதை அறியாமல் இருந்திருக்கலாம். இதனோடு அந்தப் பகுதி இருட்டாக இருந்ததால், திரு. டே ஈரமான மேற்பரப்பில் கால் வழுக்கி நீச்சல் குளத்தில் விழுவதற்கு முன் அவரது தலையில் அடிபட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

“சிங்கப்பூர்.. 3,00,000 வெள்ளி லஞ்சம் பெற்ற மெகா ஊழல் வழக்கு”.. 3 தமிழர்கள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு – 5 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு

இந்த சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை என்றும், இந்த சம்பவம் அந்த குடியிருப்பின் CCTVயில் பதிவாகவில்லை என்றும் மரண விசாரணை அதிகாரி கூறினார். இந்த விபத்துக்கு காரணமாக கருதப்படும் பணிப்பெண்ணின் குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்கள் ஆய்வின் முடிவில் வெளியிடப்படவில்லை. மேலும் அந்த பணிப்பெண்ணிடம் அவர் தவறாக நடந்தரா என்பதும் குறிப்பிடப்படவில்லை.

இறப்புக்கு முன் திரு. டே கவலையுடன் இருந்தார் என்றும், ஆனால் அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு விரக்தியில் இருந்ததாக தெரியவில்லை என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, புக்கிட் திமாவில் உள்ள தனது வீட்டில் திரு. டே இருந்தபோது, ​​தான் மன அழுத்தத்தில் இருந்ததால் நடைபயிற்சி செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார், அப்போது இரவு சுமார் 10.45 மணி.

நானும் வருகின்றேன் என்று கூறிய மனையையும் அழைத்துக்கொள்ளாமல் தனியே அவர் நடக்க சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்யத்துவங்கியதால், அவர் எங்காவது மழைக்கு ஒதுங்கியிருக்கலாம் என்று கருதி குடையுடன் அவரது மனைவி அவரைத் தேடி கீழே இறங்கியுள்ளார்.

“சாலை விதிகளை மீறிவிட்டாய்.. லஞ்ச பணத்தை யாருக்கும் தெறியாமல் எங்க காரில் போடு” – சிங்கப்பூரரை மிரட்டய மலேசிய போலீஸ்? – வெளியான வீடியோ

அப்போதுதான் நீச்சல் குளத்தில் யாரோ கிடப்பதை உணர்ந்து ஓடிச்சென்று பார்க்கும்போது தனது கணவர் அங்கு இருந்துள்ளார். இறுதியில் அருகில் இருந்த காவலர்கள் உதவியால் நீரில் இருந்து எடுக்கப்பட்ட அவருக்கு SCDF படையினர் முதலுதவி அளித்தனர்.

அதன் பிறகு அவர் ஏற்கனவே இருந்திருப்பது தெரியவந்தது, இந்நிலையில் அவருடைய மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்கு இடமான விஷயமும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts