TamilSaaga

விலங்கு தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடைவர் – வீடியோ எடுத்த பெண்ணுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் சட்டத்துக்கு புறம்பாக விலங்குகள் நிறைந்த தோட்டத்திற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த 19 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் விலங்குகள் தோட்டம் புகார் அளித்திருந்தது.

தடைசெய்யப்பட்ட அந்தப் பகுதிக்குள் 19 வயது நிரம்பிய ஆண் மகன் ஒருவர் அத்துமீறி நுழைந்து சாகசச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தகிக்கப்படுகிறார். மேலும் அவருடன் இருந்த 18 வயது பெண்ணும் அந்த காட்சியை பதிவு செய்து டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வூட்லண்ட்ஸ் காவல்துறை பிரிவு அதிகாரிகள் சம்பவம் நடந்த அன்று சம்பந்தப்பட்ட இருவரையும் அடையாளம் கண்டனர். பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் சட்டத்தை மீறி ஆடவர் நுழைந்ததற்கு உடந்தையாக இருந்ததாக அந்த பெண்ணுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் அந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 மாதம் சிறை தண்டனையோ அல்லது ஆயிரத்து 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

Related posts