TamilSaaga

சிங்கப்பூரில் இந்த 7 படிப்புகளுக்கு “தரமான” சம்பளம்.. Freshers-க்கு ஆரம்பமே “அதகளம்” – சிங்கப்பூருக்கு போனா இப்படி உங்க ஊரே வியக்குற அளவுக்கு போகணும்!

வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதிலும் குறிப்பாக, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கும் சிங்கப்பூரில் வேலை பார்க்க வேண்டும் என்று எத்தனையோ வெளிநாட்டினர் கனவு காண்பதுண்டு. இதுபற்றி பலர் சிறுவயது முதலே கனவு கண்டு வருவதுண்டு.

சிங்கப்பூரில் பக்கத்து வீட்டுக்காரர் மீதுள்ள கடுப்பில் வாசலில் “Urine” ஊற்றிய பெண் – ஒரு பெரியமனுஷி செய்ற வேலையா இது?

கொஞ்சம் பிராக்டிக்கலா யோசிச்சுப்பார்த்தீங்க அதிக சம்பளம் வாங்குற வேலைதான் முக்கியம். சில படிப்புகளை முடித்த பட்டதாரிகளுக்கு சிங்கப்பூரில் மற்ற ஃபீல்டுகளை விட அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். அப்படியான 7 படிப்புகள் பத்திதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப்போறோம்.

டாக்டர்

ஒரு மருத்துவராகவோ அல்லது மருத்துவத் துறையிலோ நீங்க பணியாற்றுவது, உங்களின் சோசியல் ஸ்டேட்டஸை உயர்த்தும். மக்களின் உயிர் காக்கும் துறையில் பணியாற்றுவது, உங்கள் பணியை மதிப்புமிக்கதாகவும் காட்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் ஊதியமும் அதிகமாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் நிதர்சனம். சிங்கப்பூரைப் பொறூத்தவரை இந்தப் பணி மகத்தானதாக மதிக்கப்படுகிறது. மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, உங்கள் பணியை சிங்கப்பூரில் தொடங்கும்போது, தொடக்க நிலையிலேயே 3,095 சிங் டாலர்கள் அளவுக்கு ஊதியம் பெற முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். `Fresh Graduates’-ஐப் பொறுத்தவரையில் சிங்கப்பூரில் அதிக ஊதியம் பெறும் பணி இதுதான்.

Bio-Engineer

பொறியியலையும் உயிரியலையும் இணைத்துப் படிக்கும் `Bio-Engineer’-களுக்கான தேவை சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் முக்கியமான பணியை மேற்கொள்ளும் இந்தத் துறையினருக்கான வரவேற்புமே அதிகம். இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு அறுவைச் சிகிச்சைகள், மருத்துவத் துறை பற்றிய தெளிவுகள் அவசியம். தொழில்நுட்பங்கள் வாயிலாக இவற்றை மேற்கொள்ள இந்தத் துறையினரின் பங்களிப்பு முக்கியமானது. சிங்கப்பூரில் இரண்டாவது பெரிய ஊதியம் அளிக்கப்படும் துறை இதுதான். படிப்பை முடித்தவுடனேயே இந்தத் துறை சார்ந்தவர்களுக்கு 3,082 சிங் டாலர்கள் அளவுக்கு ஊதியம் கிடைக்கும் என்கிறார்கள்.

இனி உங்க பாஸ்ப்போர்ட்டில் ஸ்டாம்பிங் இருக்காது – குறிப்பிட்ட பயணிகளுக்கு சிங்கப்பூர் ICA தரும் “வரப்பிரசாதம்”

நிதி மேலாண்மை

சிங்கப்பூரில் அதிக தேவை மற்றும் ஊதியம் பெறும் வரிசையில் மூன்றாவது இடம் நிதி மேலாண்மைத் துறையில் பணியாற்றுபவர்களுக்குத்தான். பொதுவாக Wealth Management’ எனப்படும் நிதி மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அரசின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு முதலீடு, சொத்துகளை நிர்வகிப்பது எப்படி உள்ளிட்டவைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். அதேபோல், வாடிக்கையாளர்கள் எந்தெந்த விஷயங்களில் முதலீடு செய்யலாம், செலவுகளைக் குறைப்பது எப்படி போன்றவைகளில் இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள். சவாலான துறையான இது, எந்த இடத்தில் நீங்கள் பணியாற்றப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் அதன் அளவுகோலும் அமையும். உதாரணமாக, வங்கிகளில் நீங்கள் பணியாற்ற நினைத்தால், அது உங்களுக்கான தினசரி சவால்களை அதிகமாகக் கொண்டதாகும். இந்தத் துறையில் பணியாற்ற விரும்பும் Fresher’-களுக்கே 2,959 சிங் டாலர்கள் அளவுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

வழக்கறிஞர்

சட்ட,திட்டங்களை அறிந்து வழக்குகளில் வாதாட விரும்பும் வழக்கறிஞர்களுக்கு சிங்கப்பூர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பதுண்டு. வாதாடும் திறமை உங்களுக்கு இருக்குனு நினைக்கிறீங்களா… உங்களுக்கான ஃபீல்டுதான் இது. Criminal Law’ தொடங்கி Business Law’ வரையில் இதிலிருக்கும் பல்வேறு உட்பிரிவுகளில் நீங்கள் நிபுணத்துவம் பெறுவது, உங்களுக்குக் கூடுதல் பலன் கொடுக்கும். உங்களின் ஆர்வத்தைப் பொறுத்து எந்த சட்டத்தில் நீங்கள் வல்லுநராக வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். சட்ட வல்லுநர்களுக்கான ஆரம்ப ஊதியமே 2,825 சிங் டாலர்களில் இருந்து தொடங்கும்.

Environmental Engineer

இயற்கையின் மீதும் அதைப் பாதுகாப்பதன் மீது அக்கறை கொண்ட நபரா நீங்க… அப்டினா உங்களுக்கான துறை இது. அறிவியல் மற்றும் பொறியியலில் நீங்கள் எக்ஸ்பர்ட்டாகும்போது, அதைப் பயன்படுத்தி மரங்களையும், இயற்கைச் சூழலையும் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும். இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில் ரொம்பவே அக்கறை கொண்ட சிங்கப்பூரில் இந்தத் துறைக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. இந்தத் துறையில் தங்களது கரியரைத் தொடங்குபவர்களுக்கு தொடக்க நிலை ஊதியமாக 2,781 சிங் டாலர்கள் அளவுக்குக் கொடுக்கப்படும் என்கிறார்கள்.

பத்திரிகையாளர்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகைத் துறை ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றக் கூடிய துறையாகும். தவறுகளைச் சுட்டிக் காட்டுவது தொடங்கி, பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டு செல்வது, தேவைப்படுவோருக்கு உதவிகள் பெற்றுத் தருவது என இந்தத் துறை மேற்கொள்ளும் பணிகள் சமூக முன்னேற்றத்துக்கு அளிக்கும் பங்கு அளப்பரியது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு ஏற்ற துறை இது. இந்தத் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் ஆரம்ப நிலையில் 2,781 சிங் டாலர்கள் அளவுக்கு ஊதியம் கிடைக்கும்.

இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. VIPகளை போல சாலையை கடந்த நீர்நாய்கள் – சிங்கப்பூரர்கள் எப்போதுமே Great!

IT Expert

கம்ப்யூட்டரில் ஜாலம் காட்டுபவரா நீங்க… டெக் ஜீனியஸ் ஆகணும்னு கனவு காண்பவரா நீங்க… உங்களுக்கு ஏற்ற துறை இது. `IT Expert’-கள் தேவை என்பது உலக அளவில் ரொம்பப் பெரியது. அதேபோல், சிங்கப்பூரிலும் இந்தத் துறை சார்ந்த வல்லுநர்களின் தேவையும் அதிகமாக இருக்கிறது. இந்தத் துறையில் பட்டம் பெற்ற இளம் பணியாளர்கள் தொடக்கத்திலேயே, 2,718 சிங் டாலர்கள் அளவுக்கு ஊதியம் பெற முடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts