TamilSaaga

சிங்கப்பூரில் பக்கத்து வீட்டுக்காரர் மீதுள்ள கடுப்பில் வாசலில் “Urine” ஊற்றிய பெண் – ஒரு பெரியமனுஷி செய்ற வேலையா இது?

சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள HDB குடியிருப்பில் வசிக்கும் வயதான பெண் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் தனது அண்டை வீட்டாரை துன்புறுத்தி வருவதாக குற்றம் சட்டப்பட்டுள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பாதிக்கப்பட்டவர், தனது மறைந்த தாத்தாவின் ஷூ ரேக்கை தனது வீட்டிற்கு வெளியே வைத்தபோது இந்த பிரச்சனை தொடங்கியது என்று Mothership செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர் அளித்த தகவலின்படி, அந்த Shoe Rack வைத்துள்ள இடம் தனக்கு சொந்தமான இடம் என்று கூறி அவர் பிரச்சனை செய்ததாக தெரிகிறது.

சிங்கப்பூர் சாலையில் “சடன் பிரேக்” போட்ட பேருந்து ஓட்டுநர் : பஸ்சுக்குள் நிலைத்தடுமாறி விழுந்த முதியவர் பலி!

அப்போதிருந்து, அந்தப் பெண் தன்னுடைய பொருட்களை தூக்கி எறிந்துவிட்டு, அந்த நடைபாதையை தொடர்ந்து அழுக்காக்குவார் என்று கூறினார் பாதிக்கப்பட்டவர். “ஒவ்வொரு நாளும், அந்த பகுதி அசுத்தம் செய்ய ஏதோ ஒன்றை அந்த பெண்மணி தொடர்நது செய்துகொண்டு இருப்பார்.” “எங்கள் பூந்தொட்டிகளை தூக்கி எறிவது, எங்கள் துடைப்பம் மற்றும் குப்பை தொட்டியை தூக்கி எறிவது. அவரது வீட்டில் இருந்து பழைய குப்பைகளை எங்கள் வீட்டுக்கு வெளியே எறிவது, எங்களுக்கு வரும் டெலிவரி Packageகளை வீசி எறிவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்” என்று பாதிக்கப்பட்டவர் மதர்ஷிப்பிடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் இந்த வழக்கு சம்மந்தமான இரண்டு CCTV காட்சிகளையும் வழங்கியுள்ளார், ஒன்று ஜூலை 2021 அன்று பதிவானது மற்றும் மற்றொன்று செப்டம்பர் 2021 அன்று பதிவானது. மேலும் ஜனவரி 2022 அன்று பதிவான வீடியோவில் பாதிக்கப்பட்டவரின் காலணிகள் மற்றும் ஷூ ரேக் முழுவதும் சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒரு திரவத்தை அந்த பெண்மணி ஊற்றியுள்ளார். இறுதியில் அவர் ஊற்றியது சிறுநீர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இனி உங்க பாஸ்ப்போர்ட்டில் ஸ்டாம்பிங் இருக்காது – குறிப்பிட்ட பயணிகளுக்கு சிங்கப்பூர் ICA தரும் “வரப்பிரசாதம்”

அது உண்மையாகவே சிறுநீர்தான் என்பதை அந்தப் பெண்ணே போலீஸாரிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. காவல்துறையில் அந்த பெண்மணியை பற்றி புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு HDB-க்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மதர்ஷிப் செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts