TamilSaaga

இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. VIPகளை போல சாலையை கடந்த நீர்நாய்கள் – சிங்கப்பூரர்கள் எப்போதுமே Great!

சிங்கப்பூரில் தனது கடமையை செய்துகொண்டிருந்த இஸ்தானா பகுதி காவலர் ஒருவர், 2 நிமிடங்களுக்கு போக்குவரத்தை நிறுத்தி, 16 நீர்நாய்கள் கொண்ட குடும்பத்தை பரபரப்பான ஆர்ச்சர்ட் சாலையை பாதுகாப்பாக கடக்க அனுமதித்த காட்சி பலரை நெகிழச்செய்துள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு மார்ச் 10 அன்று டிக்டாக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாலையில் “சடன் பிரேக்” போட்ட பேருந்து ஓட்டுநர் : பஸ்சுக்குள் நிலைத்தடுமாறி விழுந்த முதியவர் பலி!

இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற டபுள் டெக்கர் பேருந்தில் பயணித்த ஒருவரும் படம்பிடித்துள்ளார், அதில் இஸ்தானா பகுதியில் உள்ள சிக்னல் அருகே ஒரு நீர்நாய் குடும்பம் சாலையைக் கடக்கக் காத்திருப்பதை காணமுடிந்தது. அந்த போலீசார் நினைத்திருந்தால் அந்த நீர்நாய்களை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுருக்கலாம். ஆனால் சிக்னலை சிவப்பாக மற்றும் வசதி பணியில் இருந்த போலீசாரிடம் இருந்ததால் அவர்கள் அதை சிவப்புக்கு மாற்றி அந்த நீர்நாய்கள் சாலையை கடக்க உதவியுள்ளனர்.

Video Courtesy – Elias Chin

பொதுவாக VIPகளுக்காக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும், ஆனால் இம்முறை அந்த VIP-க்கள் அந்த நீர்நாய்கள் தான். வாகன ஓட்டிகளும் நீர்நாய்கள் கடக்கும் வரை அமைதியாக இருந்து அவை கடந்து செல்ல வழிகொடுத்தனர். உண்மையில் இந்த விஷயத்தில் நம்ம சிங்கப்பூரர்களுக்கு இணை அவர்களே எனலாம். அந்த 16 நீர்நாய்களும் சாலையை கடந்த பாதுகாப்பாக அந்தப்பக்கம் செல்ல 2 நிமிடங்கள் ஆனது, பலரும் அந்த காவலர்களை பாராட்டி வருகின்றனர்.

அவர் காதலிச்சது ஒரு பெண்ணை.. ஆனால் திருமணம் செய்தது மூன்று பெண்களை – சகோதிரிகளின் ஆசையை நிறைவேற்றிய “உயர்ந்த உள்ளம்”

கடந்த ஆண்டு ஜனவரி 2021ல், நீர்நாய்களின் குடும்பம் ஒன்று Plaza Singapura அருகே, குறுக்கே வந்த காரை கண்டுகொள்ளாமல் சட்டென்று சாலையை கடக்க. அந்த ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு வண்டியை நிறுத்திய நிகழ்வு குறிப்பிடத்தக்கது, அப்போதும் எந்த நீர்நாய்க்கும் ஆபத்து ஏற்படவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts