TamilSaaga

கூகுள் மேப்பில் இப்படி எல்லா கூட வசதிகள் இருக்கிறது…உங்களுக்கு தெரியுமா?

கூகுள் நிறுவனம், படித்தவர் மட்டுமின்றி படிக்காதவர்களும் கூட எளிமையாக பல வசதிகளை வழங்கி வருகிறது. மொழிபெயர்ப்பு துவங்கி, பல விதமான சேவைகளை பெறுவதற்கும் தனித்தனி ஆப்களை அறிமுகம் செய்து, அவற்றை அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக்கி, புதுப்புது அப்டேட்களையும் அவ்வப்போது வழங்கி வருகிறது. அப்படி கூகுள் அறிமுகம் செய்துள்ள ஆப் தான் கூகுள் மேப். இன்று ஆன்டிராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் பலரும் பயன்படுத்தும் ஆப் இதுவாக தான் இருக்கும். அவ்வளவு ஏன்? ஆட்டோ டிரைவர் முதல் காஸ்ட்லி கார் வைத்திருப்பவர்கள், நடந்து செல்பவர்கள் வரை இந்த ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு அங்கு போவதற்கு வழி தெரியாமல் அலைந்து திரிந்து, பலரிடமும் வழிகேட்டு குழம்பி திண்டாடிய காலம் போய், தற்போது யாருடைய உதவும் இல்லாமல் போய் சேர வேண்டிய இடத்தில் நேராக கொண்டு போய் சேர்த்து விடுகிறது கூகுள் மேப். சென்று சேர வேண்டிய இடத்திற்கு வழி காட்டுவதற்காக மட்டும் தான் கூகள் மேப் ஆப்பினை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பலருக்கும் தெரியாத பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் இதில் உள்ளன.

கூகுள் மேப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய வசதிகளை கூகுள் மேப் அறிமுகம் செய்து வருகிறது. இதை தெரிந்து கொண்டால் வாழ்க்கை பயணம் இன்னும் ஈஸியாகி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கூகுள் மேப்பில் இருக்கும் 5 சூப்பர் வசதிகள் :

  1. எலக்ட்ரிக் வாகன பயனாளர்களுக்கு :

எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துபவர்களாக இருந்தால் “Electric Charging Stations Near Me” என கூகுள் மேப்பில் தேடினால் அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன் எந்த இடத்தில், எவ்வளவு தூரத்தில் உள்ளது என்ற விபரங்கள் அனைத்தும் வந்து விடும். உங்களின் வாகனம் எந்த மாடல் என்பதை கூகுளில் உள்ளீடு செய்து விட்டால் டூ வீலர், கார் என அனைத்திற்கும் தனித்தனியாக செட்டிங்களை வழங்கி விடும்.

  1. ஸ்ட்ரீட் வியூ டைம் டிராவல் :

கடந்த காலத்திற்கு செல்லும் டைம் மிஷின்களை சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஆனால் கூகுள் மேப் கையில் இருந்தால் நமக்கும் அது சாத்தியம் தான். எப்படி என கேட்கிறீர்களா? கூகுள் மேப்பில் உள்ள ஸ்ட்ரீட் வியூ டைம் டிராவல் என்ற அம்சத்தை தேர்வு செய்தால் ஒரு இடம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது, தற்போது அடையாமல் தெரியாமல் என்னென்ன விஷயங்கள் மாறி உள்ளது என்பதை உங்களுக்கு காட்டி விடும். பல வருடத்திற்கு பிறகு ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் கூகுள் மேப்பின் இந்த புதிய அம்சம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

  1. லைவ் லொகேஷன் பகிர்வு :

வாட்ஸ்ஆப் போன்றவற்றில் லைவ் லொகேஷன் பகிரும் வசதி இருப்பது போல் கூகுள் மேப்பிலும் லைவ் லொகேஷனை பகிரும் வசதி உள்ளது. இதனால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ற தகவலை உங்களின் குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் தெரியாத ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் கூட, சரியான பாதையில் தான் செல்கிறீர்களா என்பதை அவர்களால் கண்காணிக்க முடியும். இது தனியாக செல்லும் பெண்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

  1. ஆஃப்லைன் மேப் :

சாதாரணமாக கூகுள் மேப்பை பயன்படுத்த வேண்டுமானால் இன்டர்நெட் வசதி கட்டாயம் தேவை என்று தான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. ஒருவேளை நீங்கள் சிக்னல் இல்லாத இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால், முன் கூட்டியே மேப்பை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டால், இன்டர்நெட் இல்லாமல் எந்த இடத்திலும் உங்களால் கூகுள் மேப்பை பயன்படுத்த முடியும்.

  1. AI technology வசதி :

AI technology எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியை சில குறிப்பிட்ட பயனாளர்களுக்கு கூகுள் மேப் வழங்குகிறது. இந்த தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டிய தகவல்களை கூகுள் மேப்பிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் எந்த மொழியில் கேள்வி கேட்டாலும் அதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற பதிலை வழங்கும் வசதியும் கூகுள் மேப்பில் உள்ளது

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts