ஜீன்.15 முதல் 23 வரை Straits Times நடத்திய செய்தி சேகரிப்பில் சிங்கப்பூரில் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பலரும் உடற்பயிற்சி, நடைபயணம், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஒடுதல் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் என செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் பெரும்பாலும் பொங்கோல் பூங்கா, பீஷன் பூங்கா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா மற்றும் மெரினா பே சாண்ட்ஸ் போன்ற இடங்களில் இந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
ஜீன்.17 அன்று இரவு 12.50 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரத்தில் சுமார் 17 சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட மக்களை ஹிலீக்ஸ் பாலம் மற்றும் மெரினா பே சாண்ட்ஸ் பகுதிகளில் கண்டதாக Straits Times செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது.
கொரோனா கால சூழல் காரணமாக உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாத காரணத்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதாலும் இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்வதாக பயிற்சியில் ஈடுபடும் மக்கள் தெரிவித்துள்ளனர்.