TamilSaaga

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட கார்.. தடுப்புசுவரை தாண்டி சிக்னலில் நின்ற 4 கார்கள் மீது மோதிய பயங்கர விபத்து – வெளியான வீடியோ

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட Mercedes A45 கார் ஒன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜோகூர் பாருவில் உள்ள கோட்டா டிங்கி பகுதியில் அதிவேகத்தில் வந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகும் முன், நான்கு வாகனங்கள் மீது இடித்து நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோகூர் பாரு செலாதன் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ரவூப் செலமத் கூறுகையில், அதிகாலை 2.55 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் கார், போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த மற்ற நான்கு கார்கள் மீது மோதியது என்றார்.

“சிட்டி சென்டர் திசையில் இருந்து வந்த அந்த காரை 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. “விபத்தின் போது, ​​ஓட்டுநரின் பாதையில் போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் இருந்தது என்றும், ஆனால் ஓட்டுநர் தனது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தத் தவறியதால், அது சறுக்கி சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கல்லில் மோதியது என்றும் கூறப்படுகிறது.

Dash Camல்பதிவான விபத்தின் காணொளி – Sg Road Vigilante

“சிட்டி சென்டரை நோக்கிச் செல்லும் பாதையில் சிக்னல் சிவப்பில் இருந்த நிலையில் பல வாகனங்கள் அங்கு நின்றிருந்த நிலையில் நான்கு வாகனங்களுடன் அந்த பென்ஸ் கார் மோதியது என்று காவல் அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“உள்நாடோ.. வெளிநாடோ.. எல்லா ஊழியர்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பு” : சிங்கப்பூரில் அதிகரித்த பணியிட உயிரிழப்புகள் – வருத்தப்பட்ட பிரதமர் லீ

எவ்வாறாயினும், விபத்தில் சிக்கிய ஐந்து வாகனங்களின் ஓட்டுநர்கள் அனைவருக்கும் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார். “ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் குடிபோதையில் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 43 (1)ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts