TamilSaaga

“டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள்” – புதிய தேசிய சாதனை படைத்த சிங்கப்பூரின் “Diroy Noordin”

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடந்து வரும் 2020ம் ஆண்டிற்கான பாராலிம்பிக்ஸ் ஆடவர் F40 ஷாட் புட் இறுதிப் போட்டியில், உலக சாதனை உட்பட ஆறு சிறந்த சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஷாட் புட் வீரரான டிரோய் நூர்டின் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) தனது கடைசி 6 வீசுதல்களில் 9.92 மீ தூரம் எரிந்து தேசிய சாதனை படைத்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டிகளில் தொடக்க விழாவில் நமது குடியரசின் கொடியை ஏந்திய 29 வயதான டிரோய் நூர்டின், ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற ஒன்பது போட்டியாளர்களில் எட்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ரஷ்ய நாட்டை சேர்ந்த டெனிஸ் க்னெஸ்டிலோவ் இந்த போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது சிங்கப்பூரின் டிரோய், கடந்த ஜூன் மாதத்தில் 2021 சிங்கப்பூர் தடகள செயல்திறன் சோதனை போட்டி 2ல் 9.78 மீ மற்றும் தனது நான்காவது டாஸில் 9.85 மீ தூரம் ஷாட் புட் எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது டிராயின் இரண்டாவது பாராலிம்பிக் போட்டியாகும். அவர் ரியோவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த பாராலிம்பிக் போட்டியில் 7.29 மீட்டர் எரிந்து ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார்.

Related posts