TamilSaaga

Exclusive : ‘கலக்கம் வேண்டாம் தாய்நாடு காக்கும்’ – சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஓர் பதிவு

சிங்கப்பூர், பல வெளிநாட்டு பறவைகளுக்கு (ஊழியர்களுக்கு) கூடாக விளங்கும் ஒரு சொர்க பூமி என்றால் அது மிகையல்ல. பல மொழி பேசும் மக்கள் ஒன்றாக வாழும் இந்த சிங்கப்பூர் நகரம் பன்முக திறமைகொண்ட ஒரு நாடு. பல நாட்டு மக்களின் கூட்டு முயற்சியால் செழிப்புடன் வளர்ந்து வருகின்றது.

பல தேசங்களில் இருந்து லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கு வந்து பணிசெய்து தங்களுடைய வாழ்வியலை மெருகேற்றுகின்றனர். சிங்கப்பூர் சென்று 10 வருடங்கள் உழைத்தால் போதும் நிச்சயம் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம் என்ற கனவோடு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர்.

அப்படி இங்கு பல கனவுகளோடு வந்த பணியாற்றும் தொழிலாளர்களின் கனவுகள் மெய்யாகி வருகின்றது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. சரி சிங்கப்பூர் வந்துவிட்டோம், வருடக்கணக்கில் உழைத்துவிட்டோம், ஏன் பல ஆயிரம் வெள்ளிகள் சம்பாரித்தும் விட்டோம். அடுத்து என்ன?. இந்த கேள்வி பல வெளிநாட்டு தொழிலாளர்களின் மனதில் அவ்வப்போது எழுந்து வருகின்றது. ‘சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல ஆகுமா?’ என்ற இசைஞானியின் குரலும் அந்த தொழிலாளர்களின் காதுகளில் ஒலிக்கின்றது.

எவ்வளவு விருப்பத்துடன் உழைத்தாலும் வெளிநாட்டு வேலை என்பது ஒரு கட்டத்தில் தனிமையை அளித்துவிடும். இந்த நிலையில் தான் அந்த பணியாளர்கள் மீண்டும் தங்கள் தாயகம் திரும்ப ஆசைகொள்கின்றனர். ஆனால் அதே சமயம், நம் ஊருக்கு சென்று நாம் என்ன செய்யப்போகிறோம், நமக்கு வேலை கிடைக்குமா? அல்லது தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்குமா? என்று பல கேள்விகள் அவர்கள் மனதில் எழுகின்றன. அதற்கு பதில் ‘பயம் வேண்டாம் தாயகம் இருக்கு’ என்பதே.

அண்டைநாடான இந்தியா உள்பட பல நாடுகளில் வேலைவாய்ப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றது. தொழில் முனைவோர் கூட்டங்கள் மாவட்டம் தொடங்கி தேசிய அளவில் பல நாடுகளில் நடந்து வருகின்றது. அரசின் உதவியோடு தொழில் தொடங்கி சாதித்துக்காட்டியவர்கள் பலர் இங்குண்டு. ஆதலால் செய்வது அறியாது வெளிநாடுகளில் தவிக்கும் மக்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் தாயகத்தை நம்பி மீண்டும் தாய்மடி திரும்பும்போது நிச்சயம் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கும் அவர்களது தாயகம்.

ஆகையால் தாயகம் குறித்த தேடல் வரும்போது எந்தவித அச்சமும் இல்லாமல் மனநிம்மதியோடு வாருங்கள் உங்கள் தாயகம் உங்களை தாய் போல காக்கும்.

Related posts