TamilSaaga

எந்தெந்த துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் சிங்கப்பூர் வர அனுமதி – முழு விவரம் இங்கே

சிங்கப்பூரில் தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வருவதால் விரைவில் பிற நாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி வருகின்றது. கட்டுமானத்துறை, கடல் துறை மற்றும் செய்முறை தொழில்துறை உள்ளிட்ட மூன்று துறைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எதிர்வரும் மாதங்களில் இந்திய உள்பட சில நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் சிறிய அளவில் சிங்கப்பூர் வர விரைவில் அனுமதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி வருகின்றது.

சிங்கப்பூரை பொறுத்தவரை பல லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் இந்த கொரோனா பரவளின் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தன்னுடைய எல்லைகளை மூடியுள்ளது சிங்கப்பூர் அரசு. ஆனால் சிங்கப்பூர் நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான நெருக்கடிகளை தணிக்கும் விதமாக அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் இல்ல பணிப்பெண்கள் சிங்கப்பூர் வர விரைவில் அனுமதிக்கப்படுவர் என்று வர்த்தக தொழில் அமைச்சர் காம் கிம் யோங் சென்ற மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறை, கடல் துறை மற்றும் செய்முறை தொழில்துறை ஆகிய மூன்று துறைகளில் பிற நாட்டு தொழிலார்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆதலால் இந்த துறைகளில் தொடக்க நிலை பணியாளர்களாக பிற நாட்டு தொழிலாளர்கள் விரைவில் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றபோதும், அண்டை நாடான மலேசியாவில் இருந்து சில ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts