TamilSaaga

சிங்கப்பூர்-மலேசியா இடையே அதிவேக ரயில் திட்டம்… தாமதமாவது ஏன்? சிங்கப்பூர் அரசு அளித்த விளக்கம்!

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கும் திட்டமானது ஏற்கனவே ஆலோசனையில் இருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இத்திட்டமானது பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது. மீண்டும் அந்த திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக மலேசியா அரசானது அதன் விருப்பத்தினை கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இத்திட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அப்பொழுது இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் திட்டம் குறித்து மலேசியா அரசிடம் இருந்து பரிந்துரை எதுவும் பெறப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் சீ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், இத்திட்டத்தினை மேலும் தொடங்க புதிய பரிந்துரைகள் மலேசியா அரசின் சார்பாக வைக்கப்பட்டால் மட்டும் தொடக்கத்தில் இருந்து அவை தொடங்குவதற்கு பரிசளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே பரிசீலிக்கப்பட்ட திட்டத்தின் படி மலேசியாவில் இருந்து புறப்படும் ஏழு ரயில்கள் சிங்கப்பூரில் இருக்கும் ஜுராங் ஈஸ்ட் நிறுத்தத்தில் வந்து நிற்கும் வகையில் திட்டங்கள் ஆனது போடப்பட்டிருந்தன. தற்பொழுது புதிய திட்டம் அமைக்கப்பட்டாலும், இந்த திட்டத்தில் குறிப்பிட்டவாறு ஜுராங் ஈஸ்ட் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புது திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே, ரயில்களை இயக்குவது மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நாங்கள் நன்கு அறிவோம் என்றும், அதற்கான வழிமுறைகள் அமைப்பதற்கு முறையான ஆவணங்களை பெற்ற பின்பு பரிசீலிக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. எனவே, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கிடையே ரயில்கள் உபயோகத்துக்கு வரும் பட்சத்தில் சிங்கப்பூரில் வேலை புரியும் ஏராளமான மலேசியா மக்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts