TamilSaaga

சிங்கப்பூர் கட்டுமான பணிகளுக்கு ஆட்கள் குறைவு.. தானியங்கி தொழில்நுட்பமாக மாற்றும் முயற்சி – 80% நிதியுதவி

சிங்கப்பூரில் கட்டுமான பணிகளுக்கு வேலையாட்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணமே காணப்படுகிறது. இந்த நேரத்தில் தான் கட்டுமான ஆணையமும், தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டு ஆணையமும் ஒரு கூட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையாக் பாதிக்கப்பட்டு இருக்கும் கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தானியங்கி செயல்முறைகளை கொண்டு வர 80% வரை நிதியுதவி அளிக்கும் திட்டத்தை ஆணையங்கள் தெரிவித்துள்ளது.

கட்டிடத்துறையானது குறைந்தளவு திறன் பெற்ற ஊழியர்களை நம்புவதை குறைக்கவும், தானியங்கி செயல்முறைகள் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் இந்த திட்டம் உதவும் என அமைச்சர் திரு.டான் அவர்கள் கூறியுள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் கட்டுமான துறையிக் உயர் எடை பொருட்களை சுமக்கும் போது ஏற்படும் காயங்கள், உயரமான இடங்களில் நடக்கும் விபத்து மற்றும் மரணங்கள் ஆகியவற்றை குறைக்கவும் இத்திட்டம் பயன்படும் என அமைச்சர் கூறினார்.

இந்த கட்டுமானத்துறையில் உள்ள நிறுவனங்கள் தங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள தங்களின் திட்டங்களை முன்வைக்க வேண்டும் எனவும் தொழில்நுட்பங்களை புகுத்த மற்றும் மேம்படுத்த இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts