TamilSaaga

ஜெர்மனி To சிங்கப்பூர்.. தனிமைப்படுத்துதல் இல்லை – விமான பயணிகள் மகிழ்ச்சி

புதிய தனிமைப்படுத்தல் இல்லாத திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு “இது ஒரு மென்மையான மற்றும் தடையற்ற” பயண செயல்முறை என்று முதல் இரண்டு விமானங்களில் வந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனிக்கான தடுப்பூசி போடப்பட்ட பயண பாதையின் கீழ், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான அறிவிப்பை வழங்க தேவையில்லை. ஆனால் அவர்கள் நான்கு கோவிட் -19 பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பிசிஆர்) சோதனைகளை எடுக்க வேண்டும்-புறப்படுவதற்கு முன், சாங்கி விமான நிலையத்தில் வருகை சோதனை மற்றும் வருகைக்கு பிந்தைய இரண்டு சோதனைகள் என 4 சோதனைகள் எடுக்க வேண்டும்..

அனைத்து வழிமுறைகளையும் சரியாக பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டு, சோதனைகளை செய்து வந்த பயணிகள் தாங்கள் தனிமைப்படுத்ததுதல் இல்லாமல் சிங்கப்பூருக்கு நுழைவதை மிகுந்த மகிழ்ச்சியோடு அனுபவித்தனர்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இந்த திட்டத்தின் கீழ் பயணடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts