TamilSaaga

சிங்கப்பூர் சகுந்தலா ரெஸ்டாரண்டில்.. அரிசிக்கு பதில் பொங்கிய அன்பு… தமிழக ஊழியர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய மாணவன்!

பிறந்தநாள் என்பது சிலர் கொண்டாட விரும்பும் ஒரு நாள்.. சிலர், ‘என் ஆயுளில் ஒருவருடம் போச்சே’ என்று அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சிலர், தங்கள் கொண்டாட்டத்தை தவிர்த்து, இல்லாதவர்களுக்கு, இயலாதவர்களுக்கு உதவி செய்து மன நிறைவு கொள்வார்கள்.

இதில், சற்று வித்தியாசப்படுகிறார் சிங்கப்பூரின் Jaydon Larsson Dunning எனும் 18 வயதே ஆன மாணவர்.

சிங்கப்பூரின் Temasek Polytechnic-ல் veterinary technology படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் Jaydon Larsson Dunning. இவர் தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் ஒவ்வொரு விதமாக கடப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஒரு சமூக நிறுவன உணவகத்திலிருந்து உணவு ஆர்டர் செய்து, அன்றாடம் சாப்பாட்டுக்கு கூட சிரமப்படும் நபர்களை தேடி கண்டறிந்து, அவர்களுக்கு உணவு வழங்கினார். 2019 இல், அவரது குடும்பத்தினருடன் இலங்கையில் ஒரு நாள் தங்கியிருந்து இல்லாதவர்களுக்கு உதவினார்.

இப்பொழுது, சற்று வேறு விதமாக, சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுடன் இணைந்து உணவருந்தியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 7) மாலை, அவர் தனது 18வது பிறந்தநாளை 12 வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவுடன், ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சகுந்தலாவின் ஃபுட் பேலஸில் கொண்டாடினார்.

இந்த 12 வெளிநாட்டு தொழிலாளர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கப்பல் கட்டும் தளமான Keppel Shipyard-ல் பணிபுரிகின்றனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் தேசிய தினம் 2022: சிங்கையை உலகரங்கில் தலைநிமிர வைக்க.. செங்கல்லாய் தனது வாழ்க்கையை அடித்தளமிட்ட தமிழர்! சின்னத்தம்பி ராஜரத்தினம்!

இந்த விருந்தில் கலந்து கொண்ட 12 வெளிநாட்டு ஊழியர்களின் திவாகர் என்பவரும் ஒருவர். இவர் கடந்த 6 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இந்த பிறந்தநாள் விழா குறித்து அவர் பேசுகையில், “இங்குள்ள உணவகத்தில் விருந்து வைப்பது இதுவே முதல் முறை. எனது சக ஊழியர்கள் பலர் இதற்கு முன்பு இப்படி ஒரு உபசரிப்பில் கலந்து கொண்டதில்லை. கோவிட்-19 காரணமாக, நான் ஆறு மாதங்களுக்கு முன்புதான் விடுமுறை நாட்களில் வெளியே செல்ல ஆரம்பித்தேன். இந்த உபசரிப்பில் நண்பர்களுடன் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

மற்றொரு விருந்தினரான 29 வயதான ராம் குமார் என்பவர் கூறுகையில், “இன்றிரவு ஒரு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இது எனக்கு வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. ஜெய்டனை ஒரு சகோதரனைப் போல் உணர்கிறேன்” என்று கூறினார்.

இறுதியாக Jaydon பேசுகையில், “வெளிநாட்டு ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து, பேசி, சிரித்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, பிறகு வீடியோ கால் மூலம் இந்தியாவில் உள்ள எனது நண்பர்களுடன் இந்த தருணத்தை பகிர்ந்து கொண்டது என அனைத்தும் எனக்கு மன நிறைவைத் தருகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts