TamilSaaga

லிட்டில் இந்தியாவில் கோலாகலமாக கலைகட்டிய தீபாவளி திருவிழா… தமிழர்கள் உற்சாகம்!

தீபாவளி கொண்டாட்டம் வந்து விட்டாலே லிட்டில் இந்தியாவை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். நம் இந்தியாவில் கூட இந்த அளவுக்கு தீபாவளி கொண்டாட முடியாது என்று அங்கு வாழும் தமிழர்களின் மனதில் நினைக்கும் அளவிற்கு கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும்.

இந்நிலையில் இந்த வருட தீபாவளிக்கான கொண்டாட்டம் மின்சார விளக்குகளால் அலங்காரம் அமைக்கப்பட்டு இந்தியாவில் ஒளிரத் தொடங்கியுள்ளன. இந்த வருடத்திற்கான திருவிழாவை துணை பிரதமர் ஆன லாரன்ஸ் அவர்கள் முறையாக தொடங்கி வைத்தார்.

தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள தீபாவளி கொண்டாட்டமானது டிசம்பர் மூன்றாம் தேதி வரை நீடிக்கும் என சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அலங்காரம் முழுவதும் ராதா கிருஷ்ணா என்ற கருப்பொருளுடன் விளக்குகள் முழுவதும் இந்த சாராம்சத்தை சார்ந்து அலங்காரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய அம்சமாக தீபாவளி பண்டிகை காண ஸ்பெஷலான உணவுச் சந்தை திறக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களுக்கான பாரம்பரிய உணவுகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் தீபாவளி பலகாரத்தை சுவைக்க விரும்பினால் லிட்டில் இந்தியாவிற்கு சென்று உண்டு மகிழுங்கள்.

Related posts