TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான “வரப்பிரசாதம்”.. சீப்பு முதல் செல்போன் வரை எல்லாமே “Branded”.. ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம்.. பிரமிக்க வைக்கும் “IMM ஷாப்பிங் மால்”!

நமது சிங்கப்பூரின் ஜூராங் ஈஸ்ட் பகுதியின் மிக முக்கிய அடையாளம் என்றால் அது IIM ஷாப்பிங் மால் மட்டுமே. பொதுவாக Branded இல்லாத பொருட்களே சற்று குறைவான விலையில் விற்கப்படும். ஆனால், இந்த ஷாப்பிங் மால்-ன் ஸ்பெஷாலிட்டியே, Branded பொருட்களும், வெளியில் கிடைப்பதை விட குறைவான விலையில் கிடைப்பது தான்.

IMM ஷாப்பிங் மால் உருவானது எப்படி?

IMM ஷாப்பிங் மால் 1991-ம் ஆண்டு முதன் முதலாக தனது கதவுகளை வாடிக்கையாளர்களுக்கு திறந்துவிட்டது. தற்போது சிங்கப்பூரில் இருக்கும் எண்ணற்ற மால்களில் மிகவும் தொன்மையான மால்களில் இதுவும் ஒன்றாகும்.

இது கேபிட்டலேண்ட் குழுமத்தால் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த மால் “சர்வதேச மெர்சண்டைஸ் மார்ட்” என்றே அறியப்பட்டது.. அழைக்கவும்பட்டது.

சிறப்பம்சங்கள்:

அவுட்லெட் ஷாப்பிங்: IMM ஷாப்பிங் மால் அதன் அவுட்லெட் ஸ்டோர்களுக்குப் புகழ்பெற்றது, பல்வேறு புகழ்பெற்ற பிராண்டுகளின் பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. ஃபேஷன், விளையாட்டு உடைகள், accessories, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டுப் பொருட்கள் என்று அனைத்தும் இங்கே கிடைக்கிறது.

ஒரு மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான இடம் கொண்ட IMM ஷாப்பிங் மால், பல கடைகளைக் கொண்டுள்ளது. நிச்சயம் இது உங்களுக்கு ஒரு மாறுபட்ட ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்யும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இது உள்ளூர் மற்றும் சர்வதேச Brand பொருட்களையும் விற்பனை செய்கிறது.

பொருட்களை விற்பனை செய்வது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை மிக உறுதியாக இருக்கும் நிறுவனம் அது. அருகிலுள்ள MRT நிலையங்களுக்குச் செல்லும் பேருந்து சேவைகளை இந்த மால் வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? மேலும், இலவச Wi-Fi மற்றும் ஏராளமான வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு நிறுத்துமிடங்கள் இங்கே உள்ளது.

அதுமட்டுமின்றி, இங்கு சுவையான உள்ளூர் உணவுகள் முதல் சர்வதேச உணவு வகைகள் வரை ஏகப்பட்ட வெரைட்டிகள் கிடைக்கின்றன. ஷாப்பிங் செய்பவர்கள் சினிமா மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை இங்கே அனுபவிக்க முடியும்.

IMM மாலுக்கென தனி வெப்சைட் உள்ளது. அதில், ஒவ்வொரு மாதமும் அவர்கள் தரும் சிறப்பு ஆஃபர்கள், தள்ளுபடியில், இலவசங்கள் போன்ற பல அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளலாம். இப்போது கூட, Lenskart நிறுவனத்தின் கண்ணாடி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சிறப்பு ஆஃபரை வெளியிட்டுள்ளனர்.

இங்கு கால்வின் க்ளீன் ஜீன்ஸ், கோச், கேட் ஸ்பேட், கிளப் 21, கிளார்க்ஸ், சிட்டி செயின், ஃபர்லா, கான்வர்ஸ், ஹஷ் பப்பீஸ், ஜூசி கோச்சர், மைக்கேல் கோர்ஸ், டூமி, நியூ பேலன்ஸ், நைக், அடிடாஸ், பூமா, வின்டர் டைம், டிம்பர்லேண்ட், ஒனிட்சுகா டைகர், G2000 என்று Brand-களின் பொருட்கள் கிடைக்கின்றன.

உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ Brand பொருட்களை குறைந்த விலையில் வாங்க வேண்டுமெனில், IMM ஷாப்பிங் மால்-ஐ விட ஒரு சிறந்த இடம் இருக்க முடியாது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகள் மற்றும் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts