TamilSaaga

உங்கள் Work Pass Renewal செய்யும்போது Reject ஆகிறதா? MOM-ன் இந்த வழிமுறை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Employment pass மூலம் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனம் தான் விசா குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும். மேலும் COMPASS எனப்படும் Complementary Pass – க்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் பின்புலம் போன்றவை விசாரிக்கப்பட வேண்டும். இந்த பணிகளை வேலை கொடுக்கும் நிறுவனமே இதுவரை செய்துகொண்டு வந்தது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கும் நபரின் கல்வி மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் பின்புல விசாரணைகள் போன்றவற்றை ஆவணப்படுத்தி அதனை MOM-ல் சமர்ப்பித்து பின்னர் விசா அனுமதி பெறுவதே இதுவரை இருந்த வழக்கம்.

தற்பொழுது நிறுவங்களின் சுமையைக் குறைக்க MOM அமைப்பின் முத்தரப்பு அதிகாரிகள் கொண்ட அமர்வு 12 புதிய நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது. தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை தற்பொழுது இந்த 12 நிறுவனங்களும் பொறுப்பேற்றுக் கொள்ளும். செப்டம்பர் 1 2023 லிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்த வசதி சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். பணியாளர்களை வேலைக்கு தேர்வு செய்த பின் அவர்களின் ஆவணங்களை MOM-ல் சமர்ப்பித்து விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பணியாளரின் தாய்நாடு வசிப்பிடம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த 12 நிறுவனங்களுள் ஏதேனும் ஒன்றிற்கு அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டு பணியாளர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். மேலும் ஆன்லைன் சான்றிதழ்களும் Opencerts இணையம் வழியாக சரிப்பார்க்கப்பட்டு விசா அனுமதி வழங்கப்படும்.

இதற்க்கு முன் வரை Employment Pass -ல் பணிபுரிந்தோர் அடுத்த புதுப்பித்தலின்பொழுது COMPASS விசாவுக்கு மாறுகிறார் என்றால் அப்பொழுதும் இந்த பின்புல சரிபார்ப்பு நிகழ்த்தப் பட வேண்டும். ஏற்கனவே COMPASS விசாவில் பணிபுரிந்தவருக்கு புதுப்பித்தலின் பொழுது எந்த சரிபார்ப்பும் அவசியமில்லை.

ஏப்ரல் 2023-ல் MOM அமைப்பு பணியாளர் பின்புல சரிபார்ப்புக்கான (Background Screening) முன்மொழிவு விண்ணப்பங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க ஒரு அமர்வை உருவாக்கியது. மேலும் சில விதிமுறைகளையும் வகுத்திருந்தது. அதன்படிவேலை நிறைவுக் காலம், சேவை வழங்கப்படும் பகுதிகள், வேலை முறைகள் அதற்கான செலவுகள் என அனைத்து தேவைகளையும் சிறப்பாக முன்மொழியும் நிறுவனமே இதற்க்கு தேர்ந்தெடுக்கப்படும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவங்கள் அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கும்.
விண்ணப்பதாரர்களைக் குறித்த தகவல்கள், அவர்களின் Background Screening தரவுகள் போன்றவற்றை முறையாக கண்காணிப்பதறக்கான வசதிகளை இந்த நிறுவனம் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவர்களின் வேலை முறைமையைக் குறித்த விளக்கங்களையும் மாதிரிகளையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட விதிகளின் அடிப்படையில் செய்யப்படும்
Background Screening -கிற்கு எந்த நிறுவனம் குறைந்த கட்டணம் கோருகிறதோ அந்த நிறுவங்கள் தான் தேர்ந்தெடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் வசிக்கும் நாடுகளைப் பொறுத்து $30 முதல் $60 வரை கட்டணம் நிர்ணயிக்கலாம். விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து Background Screening 1 முதல் இரண்டு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை வேலை கொடுக்கும் நிறுவனங்கள் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் அந்த 12 நிறுவனங்களும் MOM-ன் விதிமுறைகளின்படி செயல்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இதற்காக வேலை நிறுவனங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும் பொழுது மட்டும் விண்ணப்பதாரர்களின் விவரங்களை சரிபார்த்தல் போதும். Background Screening நிறுவனங்கள் மேற்கொண்டு செயல்படும். அவர்கள் கொடுக்கும் தரவுகளும் சான்றுகளும் MOM-ஆல் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் EP புதுப்பித்தலின் பொழுது எந்த ஆதாரங்களும் அவசியமில்லை.

பணியாளர்களின் பின்புல விசாரணையின்பொழுது ஏற்படும் கால தாமதத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் முன்னேற்பாடு செய்திடல் அவசியம். இதுபோல் COMPASS ஊழியர்களை பணியமர்த்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை MOM வகுத்துள்ளது. இது பணியாளர்களை தேர்வு செய்யும் நிறுவங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். My MOM என்ற இணையத்தில் இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOM தேர்ந்தெடுத்த 12 பின்புல விசாரணை நிறுவனங்கள் (Backround Screening Companies)

• Avvanz International Background Checks
• Cisive
• Dataflow
• eeCheck
• First Advantage
• HireRight
• Risk Management Intelligence (RMI)
• Sterling RISQ
• Veremark
• Vero Screening
மேற்கண்ட நிறுவனங்கள் பொதுவாக அனைத்து நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களைக் குறித்த பின்புலங்களை ஆய்வு செய்வர்.

குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கீழ்கண்ட நிறுவனங்கள் செயல்படும்:

• GPC Gateway (ஜப்பான் )
• Verity Intelligence (ஆஸ்திரேலியா,மலேசியா ,லண்டன் ,அமெரிக்க ஐக்கிய நாடுகள்)

இது குறித்து SNEF (சிங்கப்பூர் தேசிய தொழிலாளர் ஆணையம்) தலைவரான சிம் கிம் குவான் கூறுகையில்,” பணியாளர்களுக்கான பின்புல விசாரணையின் செலவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நிறுவங்களுக்கு செலுத்தப்படும். இதனால் வெளிநாட்டு பணியாளர்களை தேர்வு செய்ய வேலை நிறுவனங்கள் செலுத்தும் தொகை உயராது. இந்த பணிகளை மேலும் வலுப்படுத்த SNEF, MOM உடன் சேர்ந்து பணிபுரிவோம்” என தெரிவித்தார்.

மேலும் MOM எடுத்துள்ள இந்த புதிய முயற்சி வெளிநாட்டு பணியாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் COMPASS விசாவிற்கு தகுதியுள்ள பணியாளர்களை கண்டறிவதில் எந்த வித சிக்கலுமின்றி நிறுவனங்கள் இயங்க முடியும். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நிறுவங்களும் வேலை நிறுவங்களின் சுமையைக் குறைப்பதுடன் எளிதான மற்றும் விரைவான செயல்முறைகளைக் கையாளும் மேலும் MOM வகுத்துள்ள இந்த வழிமுறைகள் பணியாளர்களை தேர்வு செய்வதில் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் எனவும் IHRP (Institute for Human Resource Professionals) -ன் செயல் அதிகாரியான அஸ்லாம் சர்தார் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts