TamilSaaga

ஆஸ்திரேலியாவில் லாரி ஓட்டுநராக பணியாற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் – காலக்கொடுமை!

கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுபவர்கள் புகழின் உச்சிக்கே செல்கின்றனர் என்றும் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர் என்றும் நாம் அனுதினம் கேள்விப்பட்டு வருகின்றோம். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஒருவர் தற்போது தனது வாழ்க்கையை ஓட்ட ஆஸ்திரேலியா நாட்டில் லாரி ஓட்டி வருகின்றார் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? நீங்கள் நம்பாவிட்டாலும் அதுவே உண்மை.

சுராஜ் ரந்தீவ், தற்போதுள்ள 2K கிரிக்கெட் ரசிகர்களுக்கு இவரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்ட 90s கிட்ஸ் அனைவருக்கும் இவர் மிகவும் பரிட்சயமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுராஜ் ரந்தீவ், ரைட் ஆர்ம் ஆஃப் ஸ்பின்னரான இவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு, 12 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 43 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

31 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 T 20 சர்வதேச போட்டிகளில் முறையே 36 மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்பு கூறியதைப் போலவே IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த IPL போட்டிகளில் CSK அணியின் கேப்டனாக இருந்தபோது சென்னை அணியில் விளையாட சுராஜ் ரந்தீவ் ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பிறகு 2012ம் ஆண்டு இவர் அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார்.

அதன் பிறகு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்ற சுராஜ் ரந்தீவ் தற்போது ‘Transdev’ என்ற பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். மேலும் அந்த நிறுவனத்தில் சுராஜ் மட்டுமல்லாமல் முன்னாள் இலங்கை வீரரான சிந்தகா ஜெயசிங்கே மற்றும் முன்னாள் ஜிம்பாப்வே நாட்டின் கிரிக்கெட் வீரரான வேடிங்டன் வாயேங் ஆகிய இருவரும் இந்த பேருந்து நிறுவனத்தில் தான் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்படத்தக்கது.

இதுஒருபுறம் இருக்க சுராஜ் ரந்தீவ் தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள டான்டெனாங் கிரிக்கெட் கிளப்பிலும் விளையாடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Related posts