TamilSaaga

விமானத்தில் ஏறிய நடிகர் மாதவன்.. காத்திருந்த ஆச்சர்யம் – வெளியான சுவாரசியமான வீடியோ

பிரபல நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்று பெயரிடப்பட்டுள்ள பாலிவுட் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார்.

இந்நிலையில் உலக அளவில் நிலவி வரும் இந்த இக்கட்டான சூழலிலும் பல இடங்களில் தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ‘அம்ரிகி பண்டிட்’ படத்தின் படப்பிடிப்புகளும் சிறப்பான முறையில் தற்போது துபாய் நாட்டில் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் நடிகர் மாதவன் துபாய் நாட்டில் ‘அம்ரிகி பண்டிட்’ படப்பிடிப்புக்காக கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி இந்தியாவில் இருந்து துபாய் புறப்பட்டுள்ளார்.

நடிகர்கள் படப்பிடிப்புக்கு துபாய் செல்வது இயல்பான விஷயம் தான் என்றபோது, மாதவனின் இந்த துபாய் பயணம் முற்றிலும் மாறுபட்டதாகவும் அதே சமயம் சற்று திகிலூட்டும் ஒன்றாகவும் அமைந்துள்ளது. காரணம் இந்தியாவில் இருந்து மாதவன் துபாய் சென்ற அந்த விமானம் மாதவனை மட்டுமே அழைத்துசென்றுள்ளது. தனது இந்த பயணத்தை பற்றி மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் “ஜூலை 26, 2021 அன்று நான் மேற்கொண்ட இந்த பயணம் வேடிக்கையானது தான், ஆனால் பெருந்தொற்று காரணமாக பயணிகள் இல்லாதது சோகத்தை அளிக்கின்றது. இந்த நிலை விரைவில் முடிவடைய கடினமாக பிரார்த்தனை செய்கின்றேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related posts