TamilSaaga

பிரான்சுக்கு செல்லும் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை – அமெரிக்கா அறிவிப்பு

பிரான்சில் அதிக அளவிலான கொரோனா பரவல் அச்சம் காரணமாக பிரான்சுக்கு பயணிப்பது தொடர்பாக தன் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா அரசு.

பிரான்ஸ் கொவிட்-19 நான்காவது அலையுடன் மிகவும் போராடி வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்கா அரசு நேற்று (9.8.2021) முதல் பிரான்சுக்கு செல்லும் அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கயை தெரிவித்துள்ளது.

அமெரிக்கர்களுக்கு நான்காம் நிலை டு நாட் ட்ராவல் என்னும் பயண எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நோய் தடுப்பு மையங்களும் இந்த எச்சரிக்கைகளை ஏற்கனவே கொடுத்துள்ளன.

அமெரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்க குடிமக்கள் கட்டாயம் பிரான்ஸ் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் பயணிக்கும் முன்பாக முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான உறுதியை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

பிரான்சில் இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 111,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts