TamilSaaga

Interview-ல் தேர்வானால் S$5000 டாலர் போனஸ்.. வேலைக்கு சேர்ந்த முதல் நாளே கையில் பணம் – சிங்கப்பூர் நிறுவனத்தின் அறிவிப்பால் குவியும் விண்ணப்பம்!

சிங்கப்பூரில் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மீண்டும் பயணங்கள் அதிகரித்ததால், சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் சரக்குக் கையாளுபவர்கள் முதல் பொறியாளர்கள் வரையிலான வேலைக்கு ஆட்கள் எடுக்க தீவிரமாக உள்ளன.

சிங்கப்பூரில், இந்தத் துறை முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைகள் வழங்கப்பட உள்ளன. மே மாதத்தில், சாங்கி ஏர்போர்ட் குழுமம் 6,600 க்கும் மேற்பட்டோருக்கு வேலைகள் இருப்பதாகக் கூறியது. கடந்த மாதம் நடைபெற்ற OneAviation Careers வேலைக் கண்காட்சியில், 2,000 காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மூத்த போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் கூறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற two-day career and recruitment Event 11,000 க்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்கள் மற்றும் விமான ஆர்வலர்களை ஈர்த்தது என்று சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்து வேலைகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் தொழில் மாற்றத் திட்டங்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்காக 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் OneAviation Careers Hub வெப்சைட்டை CAAS தொடங்கவுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

ஆசியா பசிபிக் ஏர்லைன்ஸ் சங்கத்தின் (ஏஏபிஏ) இயக்குநர் – ஜெனரல் திரு சுபாஷ் மேனன் கூறுகையில், “உலகளவில் விமானப் போக்குவரத்துத் துறை ஆட்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து பாதியில் நிறுத்தப்பட்டதால், பல தொழிலாளர்கள் இத்துறையை விட்டு வெளியேறினர். குறிப்பாக சிங்கப்பூரில் வேலைப்பார்த்த வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வீடு திரும்பினர்” என்றார்.

மேலும் படிக்க – சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட 16 பேர்.. ஓனருக்கே தெரியாமல் 14 லட்சத்தை ஏப்பம் விட்ட பணிப்பெண் – நம்பி சிங்கை சென்று நடுத்தெருவில் நிற்கும் ஊழியர்கள்!

இதனால், இம்முறை ஏனோதானோ என்று வேலைக்கு ஆள் எடுக்காமல், விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த தகுதிவாய்ந்த தொழிலாளர்களைப் பெறுவது அவசியம். இந்த வேலைகளுக்கு பணியமர்த்தப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சி பெற வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளதாகவும், நிறைய பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், சில சிறப்பு வேலைகளை… அதாவது அதிக பொறுப்பு வாய்ந்த முக்கியமான வேலைக்கு ஆட்களை நிரப்புவது கடினமாகவும், பெரும் சிக்கலாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது Cabin Crew ஆட்சேர்ப்பு பணியை மீண்டும் தொடங்கிய பின்னர், இன்றுவரை 800 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 60 சதவீதம் பேர் இங்கு ஏற்கனவே வேலை செய்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு இதுவரை ‘பல ஆயிரம்’ விண்ணப்பங்கள் வந்துள்ளது. பெற்றுள்ளது. இது “கோவிட்க்கு முந்தைய நாட்களை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம்”.என்பது குறிப்பிடத்தக்கது.

| சுமார் 600 பணியிடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் செய்த SATS நிறுவனம், அவற்றில் பெரும்பாலானவை நிரப்பப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. அதுமட்டும்மின்றி, அந்நிறுவனம் வேலைக்கு தேர்வானவர்களுக்கு S$5,000 டாலர் போனஸும் வழங்கியுள்ளது. |

அதேபோல், dnata சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஸ்தலிஃபா அப்துல்லா கூறுகையில், “எங்கள் நிறுவனம் சுமார் 200 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த OneAviation தொழில் கண்காட்சியில் எங்களுக்கு 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன.

மேலும் படிக்க – 45 ஆண்டுகள்… 8 குழந்தைகள் – சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சிறைத் தண்டனை! வழக்கறிஞர்களே ‘இப்படியொரு குற்றத்தை’ பார்த்ததில்லை என கொந்தளிப்பு!

இப்போது நாங்கள் தற்போது விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்வதிலும், விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்வதிலும் மும்முரமாக இருக்கிறோம். தேர்வான சிலருக்கு ஏற்கனவே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்று இயக்குநர் முஸ்தலிஃபா கூறினார்.

அதுபோல், ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் சங்கத்தின் (சிங்கப்பூர்) தலைமை நிர்வாகி திரு சியா கெங் யோக் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் சரியான திறன்களைக் கொண்டவர்களுக்கு 3,000 காலி பணியிடங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரில் விமான போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு குவிந்துள்ளது. உங்களிடம் அதற்குரிய சரியான திறன் இருந்தால், சிங்கைக்கு ஃபிளைட் ஏற தயாராகிக் கொள்ளுங்கள்.

ஆல் தி பெஸ்ட்!

Related posts