TamilSaaga

டிரைவர் வேலைக்கு வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டு “சித்ரவதை” – ஒரே “போன் காலில்” மாஸ் நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின் – கண்ணீருடன் நன்றி சொன்ன குடும்பம்

ராமநாதபுரத்தை சேர்ந்த காதர் மொய்தீன், ஓட்டுநர் வேலையில் சேர கடந்த 2021ம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் எந்த வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரோ அதற்கு பதிலாக சவூதி அரேபியா எல்லையில் உள்ள பாலைவன பகுதியில் அவருக்கு ஓட்டகங்களை மேய்க்கும் பணி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஓட்டுநர் வேலைக்காக வந்த தன்னை ஒட்டகம் மேய்க்க, சமையல் செய்ய அனுப்புவதாகவும் கண்ணீருடன் காணொளி ஒன்றை whatsapp மூலம் காதர் மொய்தீன் அனுப்பினார்.

அந்த காணொளியில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கழுத்தில் கயிறு கட்டி இருக்குவதாகவும், கொத்தடிமைபோல நடத்தப்படும் தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காதர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க – “இது சிங்கப்பூரின் புதிய அடையாளம்” : 280 மீட்டர் உயரத் தோட்டம், சைக்கிளிங் – பிரமிப்பூட்டும் CapitaSpring கட்டிடம்

மேலும் இந்திய அரசு உன்னை காப்பாற்ற வராது என்றும் துன்புறுத்துபவர்கள் கூறுவதாகவும், இங்கயே வைத்து உன் கதையை முடித்துவிடுவோம் என்று மிரட்டுவதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இரவில் நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லை என்றும், விரைந்து தன்னை மீட்குமாறும் உருக்கத்துடன் அவர் பேசிய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெரும் போராட்டத்துக்கு பிறகு காதர் மொய்தீன் தற்போது மீட்கப்பட்டுள்ளார். இன்று (14.02.2022) காலை 4:30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து சேர்ந்தார்.

காதர் மொய்தீன் சிக்கியிருப்பது தொடர்பான தகவல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இஸ்லாமிய அமைப்புகளும் அவரை மீட்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அவரை மீட்கவும் முயற்சிகள் மேற்கொண்டன. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் அறிவுரையின் பேரில், அதிகாரிகள் கத்தார் நாட்டின் தூதரக அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினர்.

இதன் பலனாக, காதர் மொய்தீன் கத்தாரில் இருந்து மீட்கப்பட்டு இன்று (பிப்.14) அதிகாலை 4:30 மணிக்கு சென்னை அழைத்து வரப்பட்டார்.

உயிருடன் வந்து சேருவாரா என்ற ஏக்கத்துடன் இருந்த குடும்பத்தினர், காதர் ஏர்போர்ட்டில் வந்திறங்கியவுடன் கண்ணீருடன் வரவேற்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts