TamilSaaga

புது E-பாஸ்போர்ட் வந்துருச்சு! உங்க பாஸ்போர்ட் நிலவரம் என்ன? அப்ளை செய்வது எப்படி?

இந்தியாவின் பாஸ்போர்ட் முறையை நவீனமயமாக்குவதற்கு பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 இன் கீழ் சிப் அடிப்படையிலான இ-பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்ப மாற்றம், இந்திய குடிமக்களின் பயண அனுபவத்தை எளிதாக்குவதோடு, பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. 2024 ஏப்ரலில் தொடங்கப்பட்ட இந்த இ-பாஸ்போர்ட் திட்டம், தற்போது சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், நாக்பூர், அமிர்தசரஸ், கோவா, ராய்ப்பூர், சூரத், ராஞ்சி, புவனேஸ்வர், ஜம்மு, சிம்லா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் கிடைக்கிறது. விரைவில் இந்த சேவை இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கும் விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?

இ-பாஸ்போர்ட் என்பது எலக்ட்ரானிக் பாஸ்போர்ட், இதில் ஒரு ரேடியோ ஃப்ரீகுவன்சி ஐடென்டிஃபிகேஷன் (RFID) சிப் மற்றும் ஆண்டெனா பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப்பில் பயோமெட்ரிக் தகவல்கள் (முகப்படம், கைரேகைகள்), பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண் ஆகியவை டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படுகின்றன. இந்த தரவுகள் பேசிக் ஆக்சஸ் கன்ட்ரோல் (BAC), பாஸிவ் ஆதென்டிஃபிகேஷன் (PA), மற்றும் எக்ஸ்டெண்டெட் ஆக்சஸ் கன்ட்ரோல் (EAC) போன்ற சர்வதேச குறியாக்க தரநிலைகளால் பாதுகாக்கப்படுகின்றன. இது பாஸ்போர்ட் மோசடி, அடையாளத் திருட்டு, மற்றும் போலி ஆவணங்களைத் தடுக்கிறது.

ஏன் இந்த மாற்றம்?

2023ஆம் ஆண்டில் உலகளவில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான விமான பயணங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல நாடுகள் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை நோக்கி திரும்பியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மெக்சிகோ, கனடா, ஜப்பான் உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே இ-பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவும் இந்த உலகளாவிய மாற்றத்திற்கு ஏற்ப, தனது பாஸ்போர்ட் முறையை மேம்படுத்தி, பயணிகளுக்கு விரைவான குடியேற்ற செயல்முறைகளையும், பாதுகாப்பான அனுபவத்தையும் வழங்க முனைந்துள்ளது.

பழைய பாஸ்போர்ட் என்ன ஆகும்?

உங்களிடம் இருக்கும் பழைய பாஸ்போர்ட் (Non-ECR/ECR) இன்னும் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை தாராளமாகப் பயன்படுத்தலாம். உங்களுடைய பாஸ்போர்ட் காலாவதியாகும் நிலை வரும்போதோ அல்லது புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போதோ, புது இ-பாஸ்போர்ட்டுக்கு (E-Passport) விண்ணப்பிக்கலாம்.

இ-பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை:

இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை வழக்கமான பாஸ்போர்ட் விண்ணப்ப முறையைப் போன்றே உள்ளது. ஏற்கனவே பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகளையே இப்போதும் பின்பற்ற வேண்டும்.

 

சிங்கப்பூரில் Work Permit-ல் வேலை பார்க்குறீங்களா? இந்த சட்டத்தை பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

  • பாஸ்போர்ட் சேவா (Passport Seva) வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  • அதில் கேட்கப்படும் தேவையான விவரங்களை உள்ளிட்டு, கட்டணத்தைச் செலுத்தவும்.
    தற்போது, உங்கள் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் (Passport Seva Kendra) அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் (Post Office Passport Seva Kendra) சந்திப்பு நேரத்தை (Appointment) பதிவு செய்ய வேண்டும்.
  • குறிப்பிட்ட அப்பாயிண்ட்மெண்ட் தேதியில் நீங்கள் நேரடியாக சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்களுடைய பயோமெட்ரிக் விவரங்கள் (Biometric details),
  • புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்படும்.
  • அதன்பிறகு வழக்கமான சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, உங்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

  1. பழைய பாஸ்போர்ட் (இருந்தால்)
  2. ஆதார் கார்டு அல்லது வயது சான்று (பிறப்புச் சான்றிதழ்)
  3. முகவரி சான்று (வாக்காளர் அடையாள அட்டை, மின்சார கட்டண ரசீது)
  4. சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  5. கல்வி/பணி அனுபவச் சான்றிதழ்கள் (தேவைப்பட்டால், குறிப்பா ECR விண்ணப்பங்களுக்கு)

உலகளவில் இ-பாஸ்போர்ட்:

இந்தியாவைத் தவிர, இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா (USA), ஐக்கிய இராச்சியம் (UK), தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் இ-பாஸ்போர்ட் முறை நடைமுறையில் உள்ளது. ஏன், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளும் இ-பாஸ்போர்ட் வழங்கி வருகின்றன. இதனால், இ-பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் இந்த நாடுகளில் எளிதாக அடையாள சரிபார்ப்புகளை முடித்து விரைவாக குடிநுழைவு (Immigration) நடைமுறைகளை முடிக்க முடியும். சிப் மூலம் வழங்கப்படுவதால் கூடுதல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

 

சிங்கப்பூரில் வேலை தேடுகிறீர்களா? உங்கள் கனவு வேலை அமேசானில் உங்களுக்காக காத்திருக்கிறது!

Related posts