சிங்கப்பூரோட பொருளாதார வெற்றிக்கு வெளிநாட்டு ஊழியர்கள் முக்கிய காரணம். 2024-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூர்ல சுமார் 1.4 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் இருக்காங்க, இதுல பெரும்பாலானவங்க Work Permit அல்லது S Pass வைச்சிருக்காங்க. இவங்க, கட்டுமான தளங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், வீட்டு உதவியாளர்கள் மாதிரியான பல துறைகளில் பணியாற்றுறாங்க. இந்த ஊழியர்களை நிர்வகிக்க, MOM கடுமையான விதிமுறைகளை வைச்சிருக்கு, இது முதலாளிகளையும் ஊழியர்களையும் ஒழுங்குபடுத்துது.
வெளிநாட்டு ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு விடுமுறைக்கு போறது, அவங்க உரிமைகளில் ஒரு முக்கியமான பகுதி. ஆனா, இந்த விடுமுறை சிங்கப்பூரோட immigration மற்றும் தொழிலாளர் விதிகளுக்கு உட்பட்டு இருக்கணும். இந்த நடைமுறைகள், ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு சிக்கலில்லாம திரும்புவதை உறுதி செய்யவும், முதலாளிகளோட நிதி சுமைகளை (எ.கா., வரி செலுத்துதல்) குறைக்கவும் உதவுது. ஆனா, ஊழியர் திரும்பி வரலேனா, முதலாளிகளுக்கு சில கூடுதல் பொறுப்புகள் வருது, இதுல பாதுகாப்பு வைப்பு பறிமுதல் ஆபத்தும் இருக்கு. அது பற்றி தான் இங்கே பார்க்கப் போறோம்.
முதலில் வெளிநாட்டு ஊழியர்கள் விடுமுறைக்கு சொந்த நாட்டுக்கு போகும்போது, என்னென்ன விஷயங்களை உறுதிப்படுத்திக்கணும்-னு பார்ப்போம்.
1. செல்லுபடியாகும் பாஸ்போர்ட்:
ஊழியர்கள், சொந்த நாட்டுக்கு பயணிக்கவும், மீண்டும் சிங்கப்பூருக்கு நுழையவும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைச்சிருக்கணும். பாஸ்போர்ட்டோட காலாவதி தேதியை முன்கூட்டியே சரிபார்க்குறது அவசியம், இல்லேனா immigration சிக்கல்கள் வரலாம்.
2. தூதரக விதிமுறைகள்:
ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு immigration மற்றும் பயண விதிகள் இருக்கு. உதாரணமா, இந்தியாவ திரும்பி வர ஊழியர்கள், தங்கள் நாட்டு தூதரகத்தோட தேவைகளை முன்கூட்டியே விசாரிச்சு, தேவையான ஆவணங்களை தயார் செய்யணும்.
3. வேலை அனுமதி அட்டை மற்றும் பாஸ்போர்ட்:
ஊழியர்கள், தங்கள் Work Permit அட்டையையும் பாஸ்போர்ட்டையும் எப்போதும் எடுத்துட்டு போகணும். இவை இல்லாம, சிங்கப்பூருக்கு மீண்டும் நுழைய முடியாது. MOM-இன் ஆன்லைன் போர்ட்டல் மூலமா, Work Permit-இன் செல்லுபடியை முதலாளியும் ஊழியரும் சரிபார்க்கலாம்.
4. பயண ஆவண நகல்:
முதலாளிகள், ஊழியரோட விமான டிக்கெட் அல்லது பயண அட்டவணை (departure itinerary) நகலை வைச்சிருக்கணும். இது, ஊழியர் சிங்கப்பூரை விட்டு வெளியேறியதுக்கு ஆதாரமா பயன்படும், குறிப்பா பாதுகாப்பு வைப்பு விடுவிப்பு நடைமுறைகளுக்கு.
5. வரி அனுமதி (Levy Considerations):
ஊழியர் மூணு மாசத்துக்கு மேல விடுமுறையில் இருந்தா, முதலாளிகள் வரி செலுத்துறதை தொடரணுமா இல்லையானு MOM-இடம் சரிபார்க்கணும்.
6. வேலை அனுமதி ரத்து (நீண்ட விடுமுறை):
ஊழியர் நீண்ட காலத்துக்கு (எ.கா., 6 மாசம் அல்லது அதுக்கு மேல) விடுமுறையில் இருந்தா, முதலாளிகள் Work Permit-ஐ ரத்து செய்யலாம். இதனால, மாதாந்திர வரி (levy) செலுத்துறது நிறுத்தப்படும்.
வரி விலக்கு (Levy Waiver): எப்படி பெறலாம்?
வரி (levy), வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைச்சிருக்க முதலாளிகள் MOM-க்கு செலுத்த வேண்டிய கட்டணம். இது, ஒரு ஊழியருக்கு மாதம் S$300 முதல் S$950 வரை இருக்கலாம், தொழிலாளரோட துறை மற்றும் திறனைப் பொறுத்து. ஊழியர் வெளிநாட்டு விடுமுறையில் இருக்கும்போது, இந்த வரியை தற்காலிகமா குறைக்க அல்லது நீக்க MOM அனுமதிக்குது, ஆனா இதுக்கு சில விதிகள் இருக்கு:
குறைந்தபட்ச காலம்: விடுமுறை குறைந்தது 7 தொடர்ச்சியான நாட்களாக இருக்கணும்.
அதிகபட்ச காலம்: ஒரு வருஷத்துக்கு அதிகபட்சமா 60 நாட்களுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும்.
ஒருவேளை லீவுக்கு சென்ற ஊழியர் திரும்பி வரவில்லை என்றால்? இதுதான் மிகவும் முக்கியமான ஒரு விஷயம்..
சில சமயங்களில், ஊழியர்கள் விடுமுறைக்கு சொந்த நாட்டுக்கு போன பிறகு, திரும்பி சிங்கப்பூருக்கு வராம இருக்கலாம். இது, முதலாளிகளுக்கு நிதி மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்கலாம். MOM-இன் விதிப்படி, இந்த சூழலில் முதலாளிகள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கணும்:
சிங்கப்பூரில் நல்ல கம்பெனி & வேலை தேட Grok-AI பயன்படுத்துவது எப்படி? – விரிவான வழிகாட்டி
1. Work Permit-ஐ ரத்து செய்யணும்:
ஊழியர் திரும்பி வரலேனா, முதலாளி உடனடியா Work Permit-ஐ ரத்து செய்யணும். இது, மாதாமாதம் வரி செலுத்துறதை நிறுத்த உதவும். MOM-இன் ஆன்லைன் WP Online போர்ட்டல் மூலமா இதை சில நிமிஷங்களில் செய்யலாம்.
2. பயண ஆவணங்களை வைச்சிருக்கணும்:
ஊழியர் சிங்கப்பூரை விட்டு வெளியேறியதுக்கு ஆதாரமா, விமான டிக்கெட் அல்லது பயண அட்டவணை நகலை முதலாளி வைச்சிருக்கணும். இந்த ஆவணங்கள், பாதுகாப்பு வைப்பு விடுவிப்பு நடைமுறைகளுக்கு அவசியம்.
3. Security Bond விடுவிப்பு:
பாதுகாப்பு வைப்பு, ஒரு ஊழியரோட விதிமுறைகளை முதலாளி பின்பற்றுறதை உறுதி செய்ய வைக்கப்படுற S$5,000 தொகை (மலேசிய ஊழியர்களுக்கு இது தேவையில்லை). MOM, ஊழியர் சிங்கப்பூரை விட்டு வெளியேறி, மீண்டும் நுழையலேனு உறுதி செய்த பிறகு, இந்த வைப்பை விடுவிக்கும்.
4. ஊழியர் மீண்டும் நுழைந்தா என்ன செய்வாங்க தெரியுமா?
பாதுகாப்பு வைப்பு விடுவிக்கப்படுறதுக்கு முன்னாடி ஊழியர் சிங்கப்பூருக்கு திரும்பி வந்தா, முதலாளி உடனடியா அவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பணும். இல்லேனா, S$5,000 Security Bond முழுசா அல்லது பகுதியா பறிமுதல் செய்யப்படலாம்.
இதுக்கு, முதலாளி ஊழியரோட பயண ஏற்பாடுகளை (எ.கா., விமான டிக்கெட்) உடனடியா செய்யணும் மற்றும் MOM-க்கு தகவல் கொடுக்கணும்.
MOM-இன் 2024 அறிக்கையின்படி, ஒவ்வொரு வருஷமும் சுமார் 10,000 Security Bond விடுவிக்கப்படுது, ஆனா சில முதலாளிகள் விதி மீறல்களால இதனை இழக்குறாங்க. ஸோ, நீங்க திரும்ப சிங்கப்பூர் வந்தாலும் உடனே சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள். விடுமுறைக்கு ஊருக்கு சென்றால், சரியான நேரத்துக்கு திரும்பி வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்க.