TamilSaaga

குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் மருமகள்.. தெய்வமாய் பார்த்துக் கொள்ள வேண்டிய பாட்டியின் காதல் மோகம் – பாத்ரூம் டப்பில் வைத்து கொல்லப்பட்ட 2 வயது பேத்தி

கள்ளக்காதலால் குடும்பங்களில் ஏற்படும் விபரீதங்களை அனுதினம் நாம் நமது வாழ்க்கையில் செய்திகளாக கடந்து சென்றுகொண்டு தான் இருக்கிறோம். ஆனால் கேரளாவில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவத்தில் பச்சிளம் குழந்தையொன்று அதன் “பாட்டியின்” கள்ளக்காதலால் உயிரிழந்த சம்பவம் நம்மை நிலைகுலைய வைத்துள்ளது என்றே கூறலாம். கேரளா மாநிலம் Angamaly என்ற ஊரை சேர்ந்தவர் தான் சஞ்சீவ். சஞ்சீவிற்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அவரது மனைவி டிக்சி துபாயில் வேலைபார்த்து வந்துள்ளார்.

“சிங்கப்பூரே கதி என்று நம்பி வந்தேன்.. இனி எடுக்க எந்த லோனும் இல்ல.. வேலையும் இல்ல” – 4 உயிர்களின் பசியை போக்க போராடும் வெளிநாட்டு தொழிலாளி

இதன் காரணமாக சஞ்சீவ் தனது இரு குழந்தைகளையும் தனது தாய் சிப்ஸி வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று சிப்ஸி தனது இரு பேரக்குழந்தைகளுடன் உள்ளூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளார். அங்கே அவருடன் அந்த பேரக்குழந்தைகள் மட்டுமல்லாமல் சிப்ஸியின் கள்ளக்காதலனும் உள்ளூர் இளைஞருமான Benoy என்ற நபரும் இருந்துள்ளார்.

அவர்கள் அறையெடுத்து தங்கிய சில மணிநேரங்கள் கழித்து அந்த இருவரும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை தொழில் சுமந்தவாறு ஹோட்டல் வரவேற்பறைக்கு வந்து அருகில் மருத்துவமனை ஏதேனும் உள்ளதா? குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது கூற அவர்களும் உடனடியாக அருகில் இருந்த ஒரு மருத்துமனைக்கு அழைத்துச்செல்ல கூறியுள்ளனர். ஆனாலும் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு ஹோட்டல் ஊழியர்கள் போலீசுக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதற்கிடையில் மருத்துவமனைக்கு சென்ற சிப்ஸி தனது பேரக்குழந்தை அறையில் இருந்த நீர் நிரம்பிய பக்கெட்டில் தவறி விழுந்ததாக கூற, அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி அவர்களும் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் போலீசார் சிப்ஸியை மடக்கிப்பிடித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்த பெண்மணிக்கு Benoy என்ற நபருக்கும் இருந்த கள்ளக்காதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வீட்டில் தனது காதலனை சந்தித்து பேசமுடியாமல் இருந்த நிலையில் உள்ளுரில் ஹோட்டல் எடுத்து அவரை சந்திக்க முடிவு செய்ததாகவும். ஆனால் தான் தனியே வராமல் பேரக்குழந்தைகளுடன் அங்கு வந்தது தனது கள்ளக்காதலனுக்கு கோவத்தை ஏற்படுத்தியதாகவும் சிப்ஸி போலீசாரிடம் கூறியுள்ளார். இறுதியாக ஏன் குழந்தைகளுடன் வந்தாய் என்று கூறி இருவருக்கும் சண்டை முண்ட நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து கடுப்போடு வெளியேறியுள்ளார் சிப்ஸி. பாட்டி கோபத்துடன் செல்வதை கண்ட 2 வயது குழந்தை பீறிட்டு அழுக கோபமடைந்த அந்த கொடூரன் கழிவறையில் இருந்த தண்ணீர் வாளியில் தலைகீழாக குழந்தையை அமுக்கி கொன்றுள்ளான்.

“கெஞ்சினேன்.. கதறினேன்.. ஒரு டாக்டர் கூட வரலையே.. என் செல்லம் போயிட்டானே” – சிங்கப்பூர் NUH மருத்துவமனையில் கருவிலேயே இறந்த குழந்தை – கதறும் பெற்ற வயிறு!

அதன்பிறகு அறைக்கு வந்து பார்த்தபோது திடுக்கிட்டுப்போன சிப்ஸி காதலனை காப்பாற்ற நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts