TamilSaaga

உலகின் புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு வழங்கப்படும் கிரீஸ் நாட்டின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி…”சிறந்த ராஜதந்திரி” என கிரீஸ் அதிபர் புகழாரம்!

இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு கிரீஸ் நாட்டின் மிக உயரிய விருதான “கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்” என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுநை கிரீஸ் நாட்டின் அதிபர் கேத்ரினா வழங்கினார். இந்த விருது வழங்கும் பழக்கமானது கிரீஸ் நாட்டில் 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாள் முதல், கிரேக்க நாட்டின் மதிப்பை உயர்த்த பங்களிக்கும் கிரேக்க பிரதமர்கள் மற்றும் புகழ் பெற்ற ஆளுமைகளுக்கு வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது கௌரவத்திற்குரிய விஷயமாகும். பிரதமர் மோடியின் தலைமையில், நட்புறவு பாராட்டும் இந்திய மக்களுக்கு அளிக்கப்படும் கௌரவத்திற்கு சான்றாக அந்நாட்டின் பிரதமருக்கு விருது வழங்கப்படுகின்றது எனக் கூறி இந்த விருதை வழங்கி மரியாதை செலுத்தியுள்ளது கிரீஸ் நாடு.

உலக நாடுகளுடன் நட்புறவு பாராட்டி, இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக பல துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் இந்திய பிரதமர் ஒரு சிறந்த ராஜதந்திரி எனவும் அவரை பாராட்டுவதில் கிரீஸ் நாடு பெருமை கொள்கிறது எனவும் புகழாரம் சூட்டியுள்ளது. விருதுடன் சேர்த்து வழங்கப்படும் பாராட்டு பத்திரத்தில் ” பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமையில், நட்புறவு கொண்ட இந்திய மக்களுக்கு ஒரு கௌரவமாக வழங்கப்படுகிறது ” என்ற சொற்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts