TamilSaaga

இந்தியர்களின் அறிவைக் கண்டு வியந்த எலான் மஸ்க்…உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளாக இடம் வகிக்கும் இந்தியர்கள்!

கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்பு வருகின்றனர். இந்நிலையில் இது வியப்பாக உள்ளது என ட்விட்டர் நிறுவனத்தின் அதிபரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சர்வதேச அளவில் முக்கிய நிறுவனங்களில் தலைமை வைக்கும் இந்தியர்களின் பட்டியல் ஆனது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட பட்டியலில் மைக்ரோசாப்ட், கூகுள், யூடியூப், அடோப் போன்ற நிறுவனங்கள் மற்றும் உலக வங்கியில் தலைவராக இந்தியர்கள் உள்ளது வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஸ்டார் பக்ஸ்,CTS, மைக்ரான் டெக்னாலஜி, சேனல் போன்ற சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பல இந்தியர்கள் உள்ளனர் என பட்டியல் வெளியாகியுள்ளது.

எனவே, இந்தியர்களின் திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் எலான் மஸ்க் சிறப்பு பதிவினை இட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் சம்பளத்திற்காக வேலை பார்க்கும் நிலையில், உலக அளவில் உள்ள பெரிய பதவிகளில் இந்தியர்கள் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

Related posts