TamilSaaga

பெங்களூரு-ல் தான் செட்டில்! குழம்ப வைக்கும் சிங்கப்பூர் வாழ் இந்தியரின் காரணம்!

சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் கொஞ்ச நாள் அங்க இருந்து சம்பாதிச்சுட்டு செட்டில் ஆக இந்தியா திரும்புவது தான் காலங்காலமாய் இருந்துவரும் வழக்கம். ஆனால் அங்க சம்பாதிக்கும்போதே இந்தியர் ஒருவர் திருப்ப வர நினைத்துள்ளார். அட அது இங்க விஷயம் இல்ல! அதுக்காக அவர் சொன்ன காரணம் தான் ஸ்பெஷல். 

சிங்கப்பூரில் Realfast என்னும் நிறுவனத்தின் துணை நிறுவனராக இருப்பவர் ஆகாஷ். இவர் சிங்கப்பூரில் செட்டில் ஆனவர். மனைவி குழந்தை என குடும்பமாக சிங்கப்பூரில் சுகமாக வாழ்ந்து வந்தவர். இவர் தற்பொழுது இந்தியா செல்ல முடிவு செய்துள்ளார். அதற்காக இவர் சொல்லும் காரணம் தான் இப்பொழுது வைரல்! 

தனது மகளுக்கு கடினமான வாழ்க்கைச் சூழலை கற்றுக் கொடுக்கனுமாம்! என்னயா கொழப்புறீங்கனு தான கேக்கறீங்க? ஆமாம் இது போன்ற குழப்பமான வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்துகொள்ளச் செய்யனுமாம்! 

சிங்கப்பூரில் சுகமாக வாழ்ந்துவந்த இவருக்கு அந்த வாழ்க்கை போர் அடித்து விட்டதால், பெங்களூரு சென்று அங்கு உள்ள கடினமான வாழ்க்கைச் சூழலில் தனது மகளை வளர்க்கவும் தானும் வாழவும் தான் விரும்புகிறாராம். மேலும் இந்தியாவில் உள்ள இந்த கடினத்தை தாங்கள் மிஸ் பண்ணுவதாகவும் தனது X பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

பொதுவாகவே நாம் அனைவரும் குடும்பத்திற்கு ஒரு சுகபோகமாக வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கதான் விரும்புவோம். ஆனால் ஆகாஷின் இந்த வித்தியாசமான கரணம் நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பலர் இதை வரவேற்றும் பலர் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் அட்வைஸ்-களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். 

பெங்களூரில் உள்ள டிராஃபிக், அந்த கடினமான வாழ்க்கை முறைகள் வேண்டாம் உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை நன்றாக வாழுங்கள் என அட்வைஸ் செய்யும் நெட்டிசன்களுக்கு, தனது நண்பர்கள் அங்கு இருப்பதாகவும், அவர்களுடன் வேலை செய்வதை மிஸ் செய்வதாவும் தெரிவித்தார். 

எப்படியோ சொந்த ஊருக்கு செல்வது நல்லது தான்! எனவும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts