TamilSaaga

விரைவில் திறக்கப்படுகிறதா சிங்கப்பூர் எல்லைகள்? – நிதியமைச்சர் விளக்கம்

கொரோனா தொற்று காரணமாக சிங்கப்பூர் இன்னும் தனது எல்லைகளை பல நாட்டிற்கு திறக்கவில்லை. இதனால் சிங்கப்பூருக்கு வருபவர்கள், இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.

உலக வணிகத் தொடர்பில் மிக முக்கிய மையமாக சிங்கப்பூர் விளங்கும் காரணத்தால் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

தடுப்பூசி திட்டத்தை இன்னும் விரைவுப்படுத்தி அடுத்து வரவிருக்கும் நாட்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அதன் மூலம் மட்டுமே விரைவாக சிங்கப்பூர் எல்லைகளை திறக்க முடியும் எனவும் நிதியமைச்சர் லாரன்ஸ் ஓங் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களை பாதுகாக்க பெருமளவில் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி முடிக்காமல் எல்லைகளை திறந்தால் அது தொற்றுப் பரவலை இன்னும் மோசாமாக மாற்றிவிடும். இது சரியான செயலும் இல்லை. உலக நாடுகளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த எல்லைகளை திறக்க தடுப்பூசி திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவது தான் வழி என குறிப்பிட்டார்.

இதன் மூலம் சிங்கப்பூரில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை மிக அதிக அளவினை எட்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts