TamilSaaga

EXCLUSIVE: 40 கிலோ Luggage உடன் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி.. ஏர்போர்ட் வந்திறங்கிய பிறகு காத்திருந்த ஏமாற்றம்! – எழுதி கையெழுத்து வாங்கிய Scoot!

TRICHY: விமானத்தில் பயணிக்கையில், நாம் கொண்டு வரும் பொருட்கள் எல்லாம் பத்திரமாக வந்து சேரும் என்று நினைப்பவர்களுக்கு, இப்படியும் ஒரு அனுபவம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை உணர்த்தும் ஓர் உண்மை சம்பவம் இது.

நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தித் தளத்துக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் செய்தி இது.

“கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானத்தில், பயணி ஒருவர் 40 கிலோ Luggage உடன் திருச்சிக்கு பயணத்திருக்கிறார். சாங்கி விமான நிலையத்தில், Luggage-க்கான அனைத்து நடைமுறைகளையும் முறைப்படி செய்துள்ளார்.

பிறகு திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிறகு, அவருடைய Luggage-ல் 20 கிலோ மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது. மீதம் உள்ள 20 கிலோ என்ன ஆனதென்றே தெரியவில்லை. பதட்டமடைந்த அந்த பயணி, விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்திருக்கிறார். அவர்களோ, மீண்டும் நன்றாக சோதித்து பாருங்கள் என்று கூற, இவர் மீண்டும் சென்று செக் செய்த போது, மீதமிருந்த 20 கிலோ லக்கேஜ் கிடைக்கவேயில்லை.

மேலும் படிக்க – “புதுகை பிரதர்ஸ்”… 12 வருடங்களாக சிங்கப்பூரில் யாராலும் அசைக்க முடியாத கபடி அணி.. கால் வைக்கும் இடமெல்லாம் வெற்றி! ஜெயிக்கும் பணத்தை அப்படியே சேமிக்கும் ஒரே டீம்! வேற லெவல் நீங்க!

பிறகு அவர் மீண்டும் சென்று அதிகாரிகளிடம் லக்கேஜ் வந்துசேரவில்லை என்று கூறியதையடுத்து, அவர்கள் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், 20 கிலோ லக்கேஜ் விமானத்திலேயே ஏற்றப்படவில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. ஆம்! அந்த பயணியில் 20 கிலோ மட்டுமே ஏற்றப்பட்டிருக்கிறது.

இதன் காரணம் குறித்து கேட்ட போது, Flight Over Load ஆகிவிடும் என்பதால், அவரது 20 கிலோ லக்கேஜை ஏற்றவில்லை என்று ஏர்லைன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு மட்டுமல்ல, இன்னும் 2, 3 பயணிகளின் லக்கேஜும் இதே காரணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த சூழலில், அந்த குறிப்பிட்ட பயணியிடம், ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ‘உங்கள் லக்கேஜை பத்திரமாக கொண்டு வந்து தருகிறோம்’ என்று சொல்லி Document-ல் அவரிடம் கையெழுத்தும் வாங்கியுள்ளனர். ஆக.18ம் தேதி வந்து இறங்கியதில் இருந்து இப்போது வரை, தினமும் அந்த பயணி திருச்சி ஏர்போர்ட் வந்து, லக்கேஜ் வந்துவிட்டதா என்று விசாரித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், இதுவரை அவருடைய 20 லக்கேஜ் திருச்சி வந்து சேரவில்லை.

வீட்டுக்கு பொருட்களை வாங்கி வந்து, அது விமானத்தில் கொண்டு வரப்படாமல், இன்று வந்துடும், நாளை வந்துடும் என்று தினம் ஏர்போர்ட் வந்து விசாரித்துக் கொண்டிருக்கும் நிலைமை உண்மையில் மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக இப்படியொரு மோசமான அனுபவம் விமான பயணத்தில் பலருக்கும் ஏற்பட்டிருக்காது. ஒருவேளை, இந்த செய்தியை படிக்கும் உங்களில் யாருக்காவது இப்படியொரு அனுபவம் ஏற்பட்டிருந்தால், அதனை Comments பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் கவனமாக இருக்க அது உதவியாக இருக்கும்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts