TamilSaaga

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு தடுப்பூசி – முன்னுரிமை கொடுத்த சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் தற்போது 12 வயது முதல் 39 வயதிற்கு இடைப்பட்ட நிரந்தர வாசிகள் மற்றும் நீண்டகால குடி நுழைவு அட்டை வைத்திருக்கும் மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.

மேலும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை சீராக இருப்பதனால் பணிப்பெண்களுக்கு குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பே தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து 45 வயதுக்கும் குறைவான வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்ய தொடங்கலாம் என்று அவர்கள் வேலை செய்யும் நிறுவன முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சகம் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மூத்தோர் பலரை பணிப்பெண்கள் பராமரித்து கொள்வதால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் இருந்து பணி செய்யும் பணிப்பெண்கள் மட்டுமல்லாமல் வெளியே சென்று மற்றவர்களிடம் தொடர்பில் இருக்கும் பணிப்பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தடுப்பூசி அளிக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றது. மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றது.

Related posts