TamilSaaga

MRT ரயிலில் குபுகுபுவென சூழ்ந்த புகை.. உயிர் பயத்தில் அலறியடித்து ஓடிய பயணிகள் – தக்க நேரத்தில் காப்பாற்றிய Kembangan எம்ஆர்டி ஸ்டேஷன்

East-West Line பாதையில் சென்றுக் கொண்டிருந்த MRT ரயிலில் பயணிகள் பெட்டி ஒன்றில் திடீரென வெள்ளைப் புகை தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோவாக படம்பிடிக்கப்பட்டு டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நேற்று (மே 20) மாலை 5 மணியளவில் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

அந்த டிக்டாக் வீடியோவில், எம்ஆர்டி ரயிலில் பல பயணிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று பின்பக்கம் வெளிவரும் வெள்ளைப் புகையைப் பார்ப்பதைக் காண முடிகிறது.

இதனால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக Kembangan எம்ஆர்டி ஸ்டேஷனில் வெளியேற்றப்பட்டனர் .

மேலும் அந்த வீடியோவின் Comments பிரிவில், ரயிலில் ஏதோ ஒன்று எரியும் வாசனையும் அடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – குரங்கு அம்மை காய்ச்சல்.. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் ‘எஸ்கேப்’ ஆக முடியாது – விமான நிலையங்களுக்கு உத்தரவு

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, SMRT ரயில்களின் தலைவர் லாம் ஷீவ் காய் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மற்றும் Yahoo அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை (மே 20) மாலை 5 மணியளவில், கெம்பாங்கன் எம்ஆர்டி நிலையத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து வெள்ளை புகை வருவதை லாம் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, ரயில் நிலைய ஊழியர்கள் பயணிகளை கீழே இறக்கிவிட்டு அடுத்த ரயிலில் ஏறுமாறு அவர்களுக்கு வழிகாட்டினர்.

மேலும் புகை வந்த அந்த ரயில் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஃப்ரீயான் வாயுவை வெளியிடும் ஏர் கண்டிஷனிங் கம்ப்ரசர் கசிவுதான் புகை வெளியேற்றத்திற்கு காரணம் என்று பின்னர் கண்டறியப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts