TamilSaaga

இந்தியா – சிங்கப்பூர் பயணம் : விமான டிக்கெட் நீங்களே புக் செய்யலாமா? இல்லை Agent மூலம் புக் செய்வது நல்லதா?

இந்த தொற்று காலத்தில் விமான பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது என்றே கூறலாம். காரணம் பல புதிய சட்டதிட்டங்கள், விமான பயணத்தில் ஏற்படும் தீடீர் மாற்றங்கள். தடுப்பூசி சான்றிதழ், நெகடிவ் சான்றிதழ் என்று பல விஷயங்களை நாம் கவனத்தில்கொள்ளவேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய சிறந்த வழி எதுவென்பதை இந்த பதிவில் நாம் கனவுள்ளோம். அதாவது பயணிக்கும் பயணி அவராகவே தனக்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்வது சிறந்ததா? அல்லது ஒரு ஏஜெண்டை அணுகி அவர் மூலம் பெறுவது சிறந்ததா?.

சிங்கப்பூர்.. “Work Pass Holders” விவகாரம் : 175 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த MOM – என்ன காரணம்?

சுயமாக டிக்கெட் புக் செய்வது..

நீங்கள் பல ஆண்டுகளாக பலநூறு விமானங்களில் பயணிப்பவராக இருந்தால், உங்களுக்கு விமான பயணத்தை பற்றிய தெளிவு 100க்கு 200 சதவிகிதம் இருக்கின்றது என்றால், நிச்சயம் நீங்கள் உங்களுக்கான விமான டிக்கெட்களை நீங்களாகவே புக் செய்துகொள்ளலாம்.

டிக்கெட் முன்பதிவின்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

நீங்களாகவே டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, நான் செல்கின்ற இடத்திற்கு மிகக்குறைவான கட்டணத்தில் சேவை அளிக்கும் ஏர்லைன்ஸ் எது?. புக் செய்த ஏர்லைன்ஸ்யிடம் refund, date change, டிக்கெட் cancel போன்ற வசதிகள் உள்ளதா?. Baggage அளவு என்ன?, விமான பயணம் அதுவாக ரத்தானால் எப்படி Refund பெறுவது போன்ற பல காரணிகளை நீங்கள் கவனிக்க வேண்டும். இவை அனைத்தையும் என்னால் தனியாக சமாளிக்க முடியும் என்ற பட்சத்தில் நீங்கள் உங்கள் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

ஏஜென்ட் மூலம் டிக்கெட் புக்கிங்

மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்களை என்னால் தனியாக செய்யமுடியாது, நிச்சயம் எனக்கு அந்த விஷயத்தில் ஒரு உதவி வேண்டும் என்று நினைக்கிறவர்கள் நிச்சயம் ஒரு ஏஜென்ட் உதவியை நாடுவது நல்லது. நிச்சயம் ஒரு அஜெனி மூலம் நீங்கள் டிக்கெட் புக் செய்யும்போது அவர்கள் அதற்கென்று தனி சேவை கட்டணத்தை பெறுவது வழக்கம்.

ஏஜென்ட் மூலம் புக் செய்வதில் என்ன நன்மை?

சரியான ஏஜென்ட் மூலம் பதிவு செய்வதால் பல நன்மைகள் உள்ளது, ஏஜென்ட்கள் பல ஆண்டுகளாக பல்லாயிரம் மக்களுக்கு டிக்கெட்களை பெற்று தருகின்றனர். ஆகையால் இதில் அவர்கள் தான் Expert என்பது தான் முதல் பிளஸ். நீங்கள் செல்லும் நாட்டிற்கு எந்த ஏர்லைன்ஸ் சிறந்தது, அதில் refund, date change, டிக்கெட் cancel உள்ளதா baggage விவரம் என்று அனைத்தும் அவர்கள் அறிவார்கள். ஆகையால் அவர்களிடம் புக் செய்யும்போதும் அவர்கள் உங்களின் தேவைக்கு ஏற்ப உங்க பயணத்தை திட்டமிடுவார்கள். மிகக்குறைந்த கட்டணத்தில் ஞாயமான முறையில் டிக்கெட் சேவை வழங்கும் ஏஜென்ட்கள் பலர் உள்ளனர்.

கொரோனா காலகட்டம்

முன்பே கூறியதை போல குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் விமான பயணம் என்பது நொடிக்கு நொடிக்கு பல மாற்றங்களை பெற்று வருகின்றது என்றே கூறலாம். ஆனால் தொடர்ச்சியாக விமான நிலையங்களோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதால் ஏஜென்ட்கள் அனைத்து வகையிலும் Update நிலையில் இருப்பதால் உங்களுக்கு அதிக அளவில் உதவியாக இருப்பார்கள்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புது சிக்கல்.. இத்தனை வருடங்களில் இதுவரை இல்லாத புதிய “தலைவலி”

அதே போல ஒரு சில ஏஜென்ட்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை நாம் நிச்சயம் மறுத்துவிட முடியாது. ஆகையால் நமக்கு தேவைப்பாடும் சேவைகளை முறையாக வழங்கும் ஏஜென்ட்களை கண்டறிந்து புக் செய்வது சிறந்தது. எனக்கு அதெல்லாம் தேவையில்லை நான் எனக்கான டிக்கெட்களை சிறந்த முறையில் புக் செய்வேன் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ஆன்லைன் மூலம் அவர்களே புக் செய்யலாம். ஆகியால் முடிவு உங்களுடையது.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி விமான நிலையம்

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts