பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மனைவி போனி வேர்மா அவர்களை 2010ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் போனியை அவர் தற்போது மீண்டும் திருமணம் செய்துள்ளார். ஏன் என்பதை இந்த பதிவில் காணலாம்.
தமிழ் சினிமா உலகின் தவிர்க்க முடியாத நடிகர்களில் பிரகாஷ் ராஜ் அவர்களும் ஒருவர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. கன்னட நாட்டில் பிறந்த இவர் கன்னட தொலைக்காட்சியில் தான் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கன்னட திரையுலகில் நடித்துவந்த இவர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களின் “டூயட்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
மணிரத்தினத்தின் பம்பாய், பாலசந்தரின் கல்கி மற்றும் சுபாஷ் போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார் பிரகாஷ் ராஜ். இருவர் மற்றும் அந்தப்புரம் என்ற படங்களுக்காக பிரகாஷ் ராஜ் இருமுறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ் ராஜ் நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
பிரபல நடிகை லலிதா குமாரி அவர்களை 1994ம் ஆண்டு திருமணம் செய்த இவர் கடந்த 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு போனி வேர்மா என்பவரை கடந்த 2010ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு சித்து ராய், மோகன ராய், பூஜா ராய் மற்றும் வேதாந்த் என்று 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மகன் வேதாந்த் ஆசைப்பட்டதற்காக தனது மனைவி போனி அவர்களை மீண்டும் தற்போது திருமணம் செய்துள்ளார்.