TamilSaaga

சிங்கப்பூர்.. கருணைக்கொலை செய்யப்படுகிறதா காட்டுபன்றிகள்? : உண்மையில் நாம் செய்யவேண்டியது என்ன?

சிங்கப்பூரின் புக்கிட் பன்ஜாங்கில் உள்ள பீடிர் சாலையில் காட்டுப்பன்றி ஒன்று குப்பைகள் அருகே சுற்றிவருவதை கண்டதை அடுத்து, சிறந்த கழிவு மேலாண்மை நடைமுறைகளைச் செயல்படுத்த அதிகாரிகளை “சிங்கப்பூர் வானிலையில் மாற்றம்” : இடியுடன் கூடிய கனமழை தொடருமா? – வானிலை ஆய்வு மையம் தரும் Update

வனவிலங்கு மீட்பு அமைப்பு ஒன்று கடந்த பிப்ரவரி 14 அன்று தனது பேஸ்புக் பதிவில், சோவா சூ காங்கில் இதேபோன்ற இரண்டு சம்பவங்களை மேற்கோள் காட்டியது. குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்ததால் காட்டுப்பன்றிகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன என்று கூறப்படுகிறது. கூடுதலாக, குடியிருப்பாளர்கள் அந்த பன்றிகளுக்கு உணவளிப்பதாக தெரிகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பன்றிகள் பற்றிய அடுத்தடுத்த புகார்கள் பெறப்பட்ட நிலையில் அவை பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு வழிவகுத்தன என்றும் ACRES தனது பதிவில் தெரிவித்துள்ளது. மதர்ஷிப்பிடம் பேசிய ACRESன் இணை தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசி பூபால் (அன்பு என்றும் அழைக்கப்படுகிறார்), இந்த இரண்டு சம்பவங்களும் 2021ல் நடந்ததாகப் பகிர்ந்து கொண்டார். நகர சபை கழிவுகளை சுத்தப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், காட்டுப்பன்றிகள் ஏற்கனவே இந்த மாற்று உணவு ஆதாரங்களுக்கு “பழகிவிட்டன” என்றார் அவர்.

எனவே, இது பள்ளிகளுக்கு அருகில் அலையத் தொடங்குகிறது, இது குடியிருப்பாளர்களிடமிருந்து பொது பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தக்கூடும் என்று அன்பு கூறினார். முதல் பன்றி ஜூன் 2021ல் பிடிபட்டதாகவும், இரண்டாவது பன்றி செப்டம்பர் 2021ல் பிடிபட்டதாகவும் அன்பு தெரிவித்தார். காட்டுப்பன்றிகள் தங்கள் இயற்கையான வாழ்விடத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பைக் குறைக்க MINDEF வேலி அமைக்கவும், உணவுக் கழிவுகளை அகற்ற நகர சபைக்கு வேண்டுகோள் விடுத்தபோதுதான், காட்டுப்பன்றிகள் கருணைக்கொலை செய்யப்பட்டதை ACRES கண்டறிந்தது. .

விரிவடையும் சிங்கப்பூர் VTL : 47 நகரங்கள், 25 நாடுகளுக்கு சேவையை நீட்டிக்கும் SIA மற்றும் Scoot – முழு விவரம்

மேலும் அன்பு கூறுகையில், காட்டுப்பன்றிகளை இடம் மாற்றும் திட்டம் தற்போது இல்லை என்றும். அவைகளை பிடிப்பது மற்றும் இடம் மாற்றுவது காட்டுப்பன்றிகள் போன்ற இரை விலங்குகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார். பீடிர் சாலையில் உள்ள HDBயில் காட்டுப்பன்றி சமீபத்தில் காணப்பட்டதைக் கருத்தில் கொண்டு, காட்டுப்பன்றிகளை இடமாற்றம் மற்றும் கருணைக்கொலை செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதற்காக மேலும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்க ACRES இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts