TamilSaaga

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு புதிய சேவையை அளிக்கவிருக்கும் LinkedIn – முழு விவரம்

புதிய வேலை வாய்ப்புகளை கண்டுபிடிப்பதில் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்க, லிங்க்ட்இன் புதிய வேலைவாய்ப்பு பொருத்தும் முயற்சியை முன்னெடுத்தது உள்ளது. இது கல்வித் தகுதிகள் மற்றும் கடந்த கால வேலைத் தலைப்புகளை விட வேட்பாளர்களின் திறன் தொகுப்புகளில் கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேபிடலாண்ட், ஓசிபிசி, ஃபுட் பாண்டா மற்றும் லாசாடா போன்ற நிறுவனங்கள் இந்த பைலட் திட்டத்தில் இணைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் முதல், தொழில்முறை வேலை நெட்வொர்க்கிங் தளமான லிங்க்ட்இன், சிங்கப்பூரில் ஒரு புதிய வேலை பொருத்தும் முயற்சியை அறிமுகப்படுத்துகிறது.

இது கல்வித் தகுதி மற்றும் கடந்த கால வேலைப் பட்டங்களை விட, வேட்பாளர்களின் திறன் தொகுப்புகளில் கவனம் செலுத்துகிறது. இது வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைப் பெற சிறந்த வாய்ப்பை அளிக்கும்.

முதலாளிகள் தங்களுக்கு தேவையான காலியிடத்தை நிரப்ப பணி தேடுபவர்களின் பட்டப்படிப்புகள், வேலைத் தலைப்புகள் மற்றும் நெட்வொர்க்குகளை மட்டுமே மதிப்பிடுவதை விட அவர்களின் திறமைகளின் அடிப்படையில் வேட்பாளர்களை மதிப்பீடு செய்யலாம் என்று லிங்க்ட்இன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில், இந்த முயற்சியில் ஏற்கனவே எட்டு வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து தலா ஒரு வேலை விளம்பரம் பைலட் முரையில் இடம்பெறும், மேலும் பல நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CapitaLand, OCBC வங்கி, உணவு விநியோக நிறுவனம் FoodPanda, NTUC Enterprise, மருந்து நிறுவனம் Zuellig Pharma, மற்றும் e- காமர்ஸ் தளங்கள் Carousell, Lazada மற்றும் Zalora ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.

Related posts