TamilSaaga

“சிங்கப்பூரில் நுழைவு நிலை சமூக ஊழியர்களின் மாதாந்திர சராசரி சம்பளம்” – விளக்கமளித்த அமைச்சர் மசாகோஸ்

சிங்கப்பூரில் நுழைவு நிலை சமூக ஊழியர்களின் மாதச் சம்பளம் சராசரியாக கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 3,400 வெள்ளியில் இருந்து 2019ல் 3,600ஆக உயர்த்தப்பட்டது. இது “அனைத்து புதிய பட்டதாரிகளின் சம்பளத்துடன் ஒப்பிடத்தக்கது” என்று சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசாகோஸ் சுல்கிஃப்லி இன்று (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றத்தில் கூறினார்.

மேலும் இந்த புள்ளிவிவரங்கள் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தின் (MSF) மனிதவள மற்றும் சம்பள கணக்கெடுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. சிங்கப்பூரில் இன்று பாராளுமன்றத்தில் பேசுகையில், சமூக ஊழியர்களுக்கான ஆரம்ப சம்பளம் மற்றும் அவர்களுக்கு அதிக சம்பளத்தை பரிந்துரைக்க விரும்புகிறாரா என்பது பற்றி எம்பி லூயிஸ் என்ஜி கேட்ட கேள்விக்கு திரு மசாகோஸ் பதிலளித்தார்.

“MSF மற்றும் சமூக சேவை தேசிய கவுன்சில் (NCSS) ஆகியவை சமூகத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து சமூக சேவை நிபுணர்களுக்கும் “போட்டி சம்பளத்தை” வழங்குவதற்கு வழிகாட்டுவதில் உறுதியாக உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். என்சிஎஸ்எஸ் சமூக சேவைத் துறையில் பல தொழில்களுக்கான துறை சம்பள வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது என்றும் திரு மாசாகோஸ் கூறினார்.

திரு மாசாகோஸ் அவர்கள் மேலும் பேசுகையில், சம்பள வழிகாட்டுதல்கள் வெவ்வேறு சமூக சேவை நிறுவனங்களுக்கிடையேயான போட்டியை கணக்கில் எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல், மற்ற துறைகளுக்குச் செல்லும் தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கான போட்டியையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

Related posts