TamilSaaga

“என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார், என் மகனாக” – நெகிழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி, அம்மாவும் குழந்தையும் நலம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்று தனக்கென தனி இடம் பிடித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கொடிகட்டி பரந்த சிவகார்த்திகேயன் 2012ம் ஆண்டு வெளியான மெரினா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது தமிழ் திரையுலகின் முன்னை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் கடந்த 2010ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை மணம்முடித்தார். ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Related posts