TamilSaaga

கோயிலுக்குள்ளும் புகுந்த கொரோனா.. சிங்கப்பூர் ஸ்ரீ சிவன் கோயிலில் தொற்று.. பிப்ரவரி 14 வரை கோயில் மூடப்படும் என அறிவிப்பு

சிங்கப்பூரில் கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் அமைந்திருக்கும், ஸ்ரீ சிவன் கோயிலில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, பிப்ரவரி 14ஆம் தேதி வரை கோயில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து அறக்கட்டளை வாரியம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று (பிப்ரவரி 10) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கோயில் வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இந்து அறக்கட்டளை வாரியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் டாக்சியில் ஏறிய சில நிமிடங்களில் பிரசவ வலி.. மருத்துவர்கள் அரக்கப்பறக்க ஓடி வர வண்டியிலேயே பிறந்த குழந்தை – “என் அதிர்ஷ்டம்” என பூரித்த டிரைவர்

மேலும், “பக்தர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றாடச் சேவைகள் ரத்து செய்யப்படும் என்றும் பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும்” என்றும் வாரியத்தின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த இதர விவரங்களுக்கு, பொதுமக்கள் கோயிலை 67434566 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். ஸ்ரீ சிவன் கோயிலை இந்து அறக்கட்டளை வாரியம் நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts