நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, கிங்ஸ்லே உள்ளிட்டோ நடித்து வரும் படம் பீஸ்ட். அனிருத் இசையமைக்க SUN Pictures இப்படத்தை தயாரித்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் 2 சிங்கிள் பாடல்கள் வெளியாகி மிகப்பெரும் ஹிட்டடித்துள்ளன. குறிப்பாக “அரபிக் குத்து” பாடல் 200 மில்லியனுக்கும் மேல் Views பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, Beast திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவெனில், கடந்த 2020ம் ஆண்டே ரிலீசாக வேண்டிய KGF 2 திரைப்படம், பெருந்தொற்று காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போக, ஒருவழியாக தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. வரும் ஏப்ரல்.14ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் ரிலீஸாகிறது.
வெறும் ஒருநாள் முன்பாக தான் பீஸ்ட் ரிலீசாகிறது. இதனால், இவ்விரு படத்துக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் உருவாகியுள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து ரிலீசான KGF திரைப்படம்
இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆந்திரா, தமிழகம், கேரளா என்று தென்னிந்திய மாநிலங்களில் இப்படம் வசூலில் சக்கைப் போடுபோட்டது. தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதனால், இதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்னும் சொல்லப்போனால் Beast படத்துக்கு நிகரான எதிர்ப்பார்ப்பு KGF இரண்டாம் பாகத்துக்கும் உள்ளது.
இந்த நிலையில் தான், PAN India படமான KGF 2 ரிலீஸ் தேதி தெரிந்த பிறகும், சன் பிக்சர்ஸ் துணிந்து பீஸ்ட் படத்தை 13ம் தேதி வெளியிடுகிறது. இதனால் இரு படங்களுக்குமே வசூலில் பாதிப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. ஆனால், இரு தயாரிப்பு நிர்வாகங்களும் தங்களது ரிலீஸ் தேதியில் உறுதியாக உள்ளன.
உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ள இரு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் மோதுவதால், இந்த Decade-ன் மிகச்சிறந்த மோதல் என்று ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.