TamilSaaga

“சிங்கப்பூரே கதி என்று நம்பி வந்தேன்.. இனி எடுக்க எந்த லோனும் இல்ல.. வேலையும் இல்ல” – 4 உயிர்களின் பசியை போக்க போராடும் வெளிநாட்டு தொழிலாளி

சிங்கப்பூர் வரும் ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளிக்கும் ஒரு கதை உண்டு, வாங்கிய கடனை கட்டணும். அம்மா, அப்பா மருத்துவ செலவு, தம்பி, தங்கைகளின் படிப்பு. மனைவி, மக்களின் வாழ்க்கை என்று பல கனவுகளோடு தான் சிங்கப்பூர் வருகின்றனர். பலருக்கும் அவர்களுடைய கனவு வெகு சீக்கிரத்தில் நிறைவேற சிலருக்கு அது பொய்த்துப்போகிறது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் தான், ஒற்றை ஆளாக குடும்பத்துக்காக போராடி சிங்கப்பூரில் உழைத்து வந்த பங்களாதேஷ் தொழிலாளி ராஜிப் அவர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்கள்.. இம்மாத இறுதியில் நிறுத்தப்படும் “Vaccination Channel” – தடுப்புசி போடாதவர்களுக்கு இனி 7 நாள் SHN

சுமார் 6 ஆண்டுகளாக இங்கு சிங்கப்பூரில் பணி செய்து வந்த ராஜிப் தான் அவருடைய குடும்பத்தின் ஒரே சொத்து. அவர் இங்கு உழைத்து அனுப்பிய பணத்தில் தான் தம்பி மற்றும் தங்கையின் படிப்பு செலவு, பெற்றோர் மற்றும் தாத்தாவின் மருத்துவ செலவு என்று ஒட்டுமொத்த குடும்பத்திற்கான செலவுகள் கணவனிக்கப்பட்டு வந்தது. இதுஒருபுரம் இருக்கும் நோயால் வாடும் தாய்க்காக உள்ளூரில் பல லோன்களையும் எடுத்துள்ளார் ராஜிப். இந்த இக்கட்டான சூழலில் தான் பேரிடியாக ஒரு செய்தி வந்தது, ராஜிபின் வேலை பறிபோனது, அவர் மீண்டும் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டார்.

சிங்கப்பூர் தான் என் துயர் தீர்க்கும் என்றும் நம்பிய மனிதன் இன்று தாயகமான பங்களாதேஷில் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளார். தாயின் மருத்துவ செலவுக்கு மட்டும் மாதம் சுமார் 11,000 Bangladesh Taka தேவைப்படுகிறது என்கிறார் ராஜிப், நமது சிங்கப்பூரில் அது 173 வெள்ளி. இனி லோன் ஏதும் எடுக்கமுடியாது நிலையிலும் அவர் உள்ளார். ஆகவே மீண்டும் சிங்கப்பூர் வந்து உழைப்பது ஒன்றே இவையனைத்திற்கும் தீர்வு என்றும் கூறுகின்றார் ராஜிப்.

“கெஞ்சினேன்.. கதறினேன்.. ஒரு டாக்டர் கூட வரலையே.. என் செல்லம் போயிட்டானே” – சிங்கப்பூர் NUH மருத்துவமனையில் கருவிலேயே இறந்த குழந்தை – கதறும் பெற்ற வயிறு!

இந்நிலையில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் “Its Raining Raincoats” இந்த தொழிலாளிக்காக ஆதரவு திரட்டி வருகின்றது. அவருக்கு மீண்டும் சிங்கப்பூரில் வேலை கிடைக்க ஒருபுறம் மற்றும் அவரது தாயாரின் வைத்திய செலவுக்காக ஒருபுறம் என்று அந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. தொழிலாளி ராஜிப்புக்கு உதவு நினைப்போர் அவர்களை தொடர்புகொள்ளலாம் என்றும் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts