TamilSaaga
Anti Indian

சிங்கப்பூரில் ‘ஆன்டி இந்தியன்’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? – பின்னணி காரணம் என்ன?

Anti Indian Movie: சினிமா படங்களை விமர்சனம் செய்தே பிரபலமானவர் மாறன். அதாவது “ப்ளூ சட்டை” மாறன். இவரின் வட்டார மொழி வழக்கில் படத்தின் விமர்சனத்தை கேட்பதற்கு என்று தனி கூட்டமே உள்ளது. அதுமட்டுமின்றி, பல முன்னணி நடிகர்களின் படங்களை மிக மோசமாக விமர்சனம் செய்தே பிரபலமானவர்.

இவரின் திரை விமர்சனங்கள் பல இயக்குனர்களை, நடிகர்களை கோபமடையச் செய்தாலும், இவரது விமர்சன பாணியை இன்றும் ரசிகர்கள் அங்கீகரிக்கின்றனர்.

மேலும் படிக்க – “நாம ஒண்ணா இருந்த வீடியோக்களை வெளியிடுவேன்” : சிங்கப்பூரில் இளைஞரை மிரட்டிய 38 வயது பெண் – ஐந்து ஆண்டு சிறைக்கு வாய்ப்பு

இந்நிலையில் தான் ப்ளூ சட்டை மாறன் முதன் முதலாக “ஆன்டி இந்தியன்” எனும் படத்தை இயக்கியுள்ளார். ஆதம் பாவா இந்த படத்தை Moon பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இப்படத்தில் ‘ஆடுகளம்’ நரேன், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் முதலில் டிசம்பரில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை. அதன் பிறகு, டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவும் ஒத்திவைக்கப்பட்டு, டிசம்பர் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட, இம்முறை மிஸ்ஸாகாமல் நேற்று (டிச.10) இப்படம் இந்தியாவில் வெளியானது. இரண்டாவது லாக்டவுனுக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு, இந்திய சென்சார் போர்டால் தடை விதிக்கப்பட்டு, பிறகு பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – “18 ஆண்டுகளாக No.1” – ஏமாற்றம், வஞ்சகம், கண்ணீரை தாண்டித் சாதித்த “லேடி சூப்பர் ஸ்டார்”

இந்த சூழலில் ஒருவழியாக படம் வெளியான நிலையில், சிங்கப்பூரிலும் ஆன்டி இந்தியன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தை பார்த்த Examine Committee, மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இருப்பதால் சென்சார் வழங்க மறுத்து விட்டது. எனினும் இன்றோ அல்லது நாளையோ மறுதணிக்கை செய்யப்பட்டு இப்படம் திரைக்கு வருமென படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts