TamilSaaga

நடிகை ஊர்வசி குடும்பத்தில் 2 தற்கொலை – 5 நாட்களாக இரு தனித்தனி அறையில் தொங்கிய சடலங்கள்.. சிக்கிய “கடிதம்”

கேரளாவைச் சேர்ந்த நடிகை ஊர்வசி, தமிழில் இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அப்படத்தில் அவரது அக்கா கல்பனா தான் முதலில் ஹீரோயினாக நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஊர்வசியை கண்ட இயக்குனர் பாக்யராஜ், அவரை ஹீரோயினாக்கினார்.

அதன் பிறகு 80 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார். 2000-க்கு பிறகு காமெடி கேரக்டர்கள் அதிகம் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். இப்போது வரையிலும் தமிழ், மலையாள சினிமாக்களில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

ஊர்வசி முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பின் கருத்து வேறுபாடு காரணமாக, பரஸ்பரம் இருவரும் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு, நடிகர் மனோஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஊர்வசியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஒரு மகனும் இருக்கிறார்.

மேலும் படிக்க – “எப்போது சிங்கப்பூரில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்” : டெல்டாவை மிஞ்சியதா Omicron? – அமைச்சர் ஓங் விளக்கம்

இந்த சூழலில், நடிகை ஊர்வசியின் குடும்பத்தில் துயர சம்பவம் நடந்துள்ளதாக “தினமலர்” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நடிகை ஊர்வசிக்கு கமல் என்ற தம்பி இருக்கிறார். அவரது மனைவி பிரமிளா. பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரிந்து விட்டார்கள். அதன்பிறகு, பிரமிளா தனது தம்பியுடன் வசித்து வந்தார்.

அதேபோல், சுசீந்திரனும் அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரமிளா மிகவும் வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஊர்வசியின் அக்கா கல்பனா தான் அவருக்கு உதவி வந்திருக்கிறார். தான் சினிமாவில் சம்பாதிப்பதில் ஊர்வசிக்கும் ஒரு பங்கு கொடுத்து வந்திருக்கிறார். பின் 2016ஆம் ஆண்டு “தோழா” படத்தின் சூட்டிங்கிலேயே கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போக, பிரமிளா ஆதரவின்றி இருந்து வந்துள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இத்தனை வருடங்களாக இருந்த விடுமுறை முறையை மாற்றும் MOM – “Sick Leave”-க்கு வரும் சிக்கல் – அமைச்சர் அறிவிப்பு

இதனால், வறுமையில் தவித்த பிரமிலா, தன் தம்பியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இறந்தது கூட அக்கம்பக்கத்தினர் யாருக்கும் தெரியவில்லை. துர்நாற்றம் வீசிய பிறகு தான், போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பிறகு அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தனி தனி அறைகளில் சுசீந்திரனும் பிரமிளாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். பிறகு இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இவர்கள் இருவரும் 5 நாட்களுக்கு முன்பே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்கள் வீட்டில் நடத்திய ஆய்வில், கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், “எங்களுடைய மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் சந்தேகப்பட வேண்டாம். வறுமை மற்றும் உடல்நிலை சரியில்லாததால் தான் நாங்கள் தற்கொலை செய்துகொண்டோம். வீட்டு வாடகை கூட எங்களால் கொடுக்க முடியவில்லை. எனவே வீட்டில் உள்ள பொருட்களை விற்று பணத்தை வீட்டின் உரிமையாளர்களுக்கு கொடுத்துவிடுங்கள். எங்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யுங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts