TamilSaaga

தங்கம் வாங்க போறீங்களா? அப்போ அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து தங்கத்தில் முதலீடு செய்ங்க!

ஆசிய நாடுகளில் மிகவும் விரும்பப்படும் உலோகம் தங்கம். இந்த தங்கத்தை ஆபரணமா போட்டுக்க ஆசைப்படும் பல நாட்டு மக்கள் ஆசிய கண்டத்தில் உள்ளனர். அதையும் தாண்டி உயர்ந்து வரும் விலை காரணமா தற்பொழுது தங்கம் ஒரு சிறந்த முதலீடா மாறி இருக்கு. நம்ம ஊர்கள்ல எல்லாரும் தங்கம் வச்சிருப்பாங்க. ஒரு குண்டு மணி தங்கமாவது வேணும்னு நெனைக்கற பல குடும்பங்கள் இங்கு உண்டு. அவங்க எல்லாருக்கும் தங்கம் ஆபரணமா தேவைப்படுறத விட அவசர பணத்திற்கு தான் அதிகமா தேவைப்படுது.

இதுவரை ஏற்பட்ட விலைவாசி உயர்வால தங்கம் வாங்கி சேமிப்பது பலருக்கு சிறந்த முதலீடாக தோன்றலாம். ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வருது. இந்த நேரத்துல தங்கத்துல முதலீடு செய்வது சிறந்த யோசனையா இருக்குமா? இதுல உள்ள நன்மை தீமைகள் என்னென்ன என்பதைப் பற்றி பாப்போம்!

முதலில் பல நாடுகளில் நிலவிவரும் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய எண்ணினால் கீழ்கண்ட விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள்:

  • தற்பொழுது உள்ள விலை நிலவரத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கம் $2300 க்கு விற்கப்படுது. அது போக ஆபரணத் தங்கத்தின் விலை செய்கூலி சேதாரம் பொறுத்து மாறுபடலாம். இந்த சமயத்தில் அதிக பணம் கொடுத்து தங்கம் வாங்குவது சிலருக்கு தயக்கமாக தோன்றலாம். அது தவிர உங்கள் சேமிப்பில் அதிக அளவு பணத்தை இதில் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
  • இது ஒரு எதிர்மறையான விஷயமா இருந்தாலும் கூட தொடர்ந்து நிலவி வருகிற பண வீக்கத்தின்படி தங்கத்தின் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருக்கு. அந்த வகையில் யோசிக்கும் பொழுது தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த யோசனையாக இருக்கும்.

அடுத்ததாக நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் பத்திரப்படுத்துதல்!

  • என்னனு யோசிக்கறீங்களா, தங்கத்தின் மீது முதலீடு செய்ய விரும்பினா அதை பத்திரமா பாதுகாக்கவும் ஒரு இடம் வேண்டுமே! அதிக பாதுகாப்பு உள்ள பெட்டகம் அல்லது வங்கி பெட்டகம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படும். இதற்காக மேலும் பணம் செலவு செய்ய நேரிடும்.
  • இது போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும் கூட மேலே குறிப்பிட்டது போல் உலக நாடுகளின் பண வீக்கத்தை பொறுத்து தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இரண்டு மடங்கு வரை உயரவும் வாய்ப்புகள் இருபதாக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்க்கு முந்தய நிலவரப்படி இந்த அளவிலான விலை உயர்வை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் இப்பொழுதே உங்கள் தங்கத்தின் மீதான சேமிப்பை வலுப்படுத்துவது சிறந்த யோசனையாக இருக்கும்.

மூன்றாவதாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் பிரதிபலன்!

  • சொத்துக்கள் அல்லது பங்குகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது சற்று மெதுவான லாபத்தை தான் கொடுக்கும். சொத்துக்கள் என்பது அந்த பகுதியைப் பொறுத்த வளர்ச்சியின் அடிப்படையில் பல மடங்கு லாபத்தை சில காலத்திலேயே கொடுக்கும். அடுத்ததாக பங்குகளில் முதலீடு செய்வது அடுத்தடுத்த வளர்ச்சியைப் பொறுத்து உங்களுக்கு தொடர்ந்து லாபத்தை ஈட்டித்தரும்.
  • ஆனால் தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு முறை முதலீடு செய்து விட்டு அதன் விலையேற்றத்திற்க்காக காத்திருந்து பிறகு தான் அதன் லாப விகிதங்கள் கணக்கிடப்படும். இதனைப் பொறுத்தமட்டில் தொடர்ச்சியான வளர்ச்சி இல்லை. ஆனால் மற்ற முதலீடுகளைப் போல் அல்லாமல் தங்கம் என்பது எப்பொழுதும் உங்களால் வாங்க இயலும்.
  • சொத்துக்களோ அல்லது பங்குகளோ பல கூறுகளை ஆராய்ந்து அதற்கான காலம் வரும்பொழுது தான் அதில் நீங்கள் முதலீடு செய்ய முடியும். ஆனால் தங்கம் அப்படி அல்ல. அங்கீகரிக்கப்பட்ட கடைகள் அனைத்திலும் கிடைக்கும். எப்பொழுதும் எல்லோரும் எளிதாக தங்கத்தை வாங்கவியலும். இதன்படி தங்கம் எளிதாக அனைவராலும் வாங்கும்படி அமைந்துள்ளதால், உங்களுக்கு தேவையான நேரங்களில் முதலீடுகளை செய்ய இயலும்.

இது போன்ற பல காரணங்களிலும் நேர்மறை மற்றும் எதிர்மறையான காரியங்கள் இருப்பதால், உங்கள் நிதிநிலைமை, பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு உங்கள் முதலீடு குறித்த முடிவுகளை எடுங்கள். தங்கம் என்பது எப்பொழுதும் நிலையான மற்றும் ஒரு பாதுகாப்பான முதலீடு ஆகும். மேலும் தற்பொழுது குறைந்து வரும் தங்கத்தின் விலை காரணமாக மற்ற நாட்களை விட இந்த மே மாதம் தங்கம் வாங்க ஏற்றதாக இருக்கும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன என்பதை பொறுத்து முதலீடுகளை செய்திடுங்கள்! உங்கள் வாழ்வின் ஆதாரங்களை உயர்த்திடுங்கள்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

 

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts