TamilSaaga

சிங்கப்பூரில் Delivery attendant, prime mover driver, delivery driver cum attendant வேலைவாய்ப்புகள் காத்திருக்கு

சிங்கப்பூர் : e2i எனப்படும் employment and employability institute பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இடையே மிகப் பெரிய பாலமாக இருந்து செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகும். இது வேலை தேடுபவர்களின் தகுதிக்கு ஏற்ற பொறுத்தமான வேலையையும், முதலாளிகளுக்கு அவர்களின் நிறுவனத்தில் காலியாக இருக்கும் உரிய பதவிகளுக்கு ஏற்ற திறமையான நபர்களையும் தேர்ந்து செய்து அளித்து வருகிறது. வேலை வாய்ப்பு மட்டுமின்றி, பணியாளர்களின் திறன் மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை பெறுவதற்கான வழிகாட்டுதல் உள்ளிட்ட பல சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

வேலை தேடும் தனி நபர்களின் வளர்ச்சிக்கு உதவும் e2i வரும் மே 15ம் தேதி காலை 10 மணி துவங்கி, மாலை 4 மணி வரை Devan Nair Institute for employment and employability, event hall 1, 80 Jurong East st 21, Singapore – 609607 என்ற முகவரியில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்க உள்ள கம்பெனிகள், அவற்றில் காலியாக உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு மற்றும் தகுதி விபரங்கள் :

Delivery attendant :

Warehouse ல் பொருட்களை சரிபார்த்தல், பேக்கிங் பட்டியலை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு assistant driver பணி. கனமான பொருட்களை தூக்கவும், வழிமுறைகளை சரியாக பின்பற்றவும், தனியாகவோ அல்லது குழுவுடன் இணைந்தோ பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். வாரத்தில் 5.5 நாட்கள் வேலை. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 08.30 முதல் 05.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 08.30 முதல் பகல் 12.30 மணி வரையிலும் வேலை. முழு நேரம் அல்லது நிரந்தர வேலையாக இருக்கும்.

prime mover driver :

தினசரி டெலிவரி, சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பது, சிங்கப்பூர் போக்குவரத்து வழிமுறைகளை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும்.

தகுதி – prime mover driver வேலையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். தனியாக வேலை செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். class 4/5 டிரைவிங் லைசன்ஸ் பெற்றவராக இருக்க வேண்டும்.

வேலை விபரம் – வாரத்தில் 5.5 நாட்கள் வேலை. காலை 8 முதல் மாலை 5 மணி வரை வேலை நேரம். சனிக்கிழமையில் காலை 8 முதல் பகல் 12 வரை வேலை. முழு நேர, நிரந்தர வேலை.

delivery driver cum attendant :

தினசரி டெலிவரி, வாகனத்தை சுத்தமாக பராமரிப்பது, சரியான நேரத்திற்கு பொருட்களை கொண்டு போய் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும்.

தகுதி – கனமான பொருட்களையும் தூக்க கூடிய உடல் தகுதி இருக்க வேண்டும். மற்றவர்களுடனும், தனியாகவும் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். class 4/5 டிரைவிங் லைசன்ஸ் அவசியம்.

வாரத்தில் 5.5 நாட்கள் வேலை. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 08.30 முதல் 05.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 08.30 முதல் பகல் 12.30 மணி வரையிலும் வேலை. முழு நேரம் அல்லது நிரந்தர வேலையாக இருக்கும்.

இந்த நேர்காணலில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://e2i.sg/3IWYFpG என்ற இணையதளத்திற்கு சென்று தங்களை பற்றிய விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். 6474 0606 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டும் வேலைவாய்ப்பு முகாம் குறித்த மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மே 14ம் தேதியுடன் முன்பதிவுகள் நிறைவடைந்து விடும். அதனால் அதற்கு முன்பாக வேலை தேடுவோர் தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலுக்கு வரும் போது உங்களின் resume உடன் NRIC யும் அவசியம் கொண்டு வர வேண்டும். அதோடு உரிய நேரத்திற்கு தவறாமல் வந்து பங்கேற்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாம் சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே. வெளிநாட்டினர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க முடியாது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts