TamilSaaga

Sustainability Space துறையில் உருவாகவிருக்கும் வேலை வாய்ப்புகள்! சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் டான் சி லெங் -ன் உரை! 

சுவிட்சர்லாந்தில் உள்ள GT-Gallen என்ற பல்கலைக்கழக கலந்தாய்வில் சிங்கபூர் சுகாதாரத்துறை அமைச்சரான டான் சி லெங்  உரையாற்றினார். அதில் Sustainability Space குறித்தும் அதில் உள்ள வேலை வாய்ப்புகள், அதன் நன்மைகள், அதனை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக பகிர்ந்து கொண்டார்.

Sustainability Space என்பது உலக நாடுகள் அனைத்திலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரம் தயாரிக்க ஒரு நிலையான ஆற்றல் வளங்களை உருவாக்கும் திட்டம் ஆகும். மின்சாரம் தயாரிக்கும் பொழுது வெளிப்படும் கார்பன் புகை சுற்றுச்சூழலை பாதிக்கும். இதுபோன்ற பாதிப்பு ஏற்படுத்தும் ஆற்றல் வளங்களுக்கு பதிலாக, பாதிப்புகள் ஏற்படுத்தாத இயற்கையான புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களை பெருக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட நிலையில் இதன் செயலாக்கத்தை பல நாடுகள் திட்டமிட தொடங்கியுள்ளன.

இதனைக் குறித்து தான் டான் சி லெங் க் உரையாற்றியுள்ளார். இந்த திட்டத்தை சிங்கப்பூரில் துவங்க முதல் கட்டமாக 5 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவதாகம் இதன் மூலம் சிங்கப்பூரில் கார்பன் புகையைக் குறைக்க திட்டமிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ஆற்றல் வளங்களான இயற்கை எரிவாயு, சூரிய மின்சக்தி போன்றவற்றை மேம்படுத்தி மின்சார உற்பத்தியை அதிகப்படுத்துவதாகவும் வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து ஒப்பந்தம் மூலமாக மின்சாரத்தை பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புவிவெப்ப ஆற்றல் மற்றும் அணு ஆற்றல் போன்றவற்றில் ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி புகையற்ற சிங்கப்பூரை உருவாக்க முயற்சி செய்யப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது சிங்கப்பூரில் கார்பன் குறைப்பு முயற்சியில் 100க்கும் மேற்பட்ட சேவை மற்றும் வர்த்தக நிறுவங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சிங்கப்பூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும்.  இன்னும் 5 முதல் 10 வருடங்களில் இது போன்ற நிவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் பெரும் வளர்ச்சி அடையும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதில் மின்சார ஓட்டத்தை மேம்படுத்தும் ஸ்மார்ட் கிரிட் போன்ற இடங்களில் பணிபுரியும் பரிசோதனை அதிகாரிகள், பொறியாளர்கள், கார்பன் புகையைக் கணக்கிடும் அதிகரிகள் போன்ற வேலை வாய்ப்புகளை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இதனை எப்படி செயல்படுத்த போகிறோம் என்பதற்கும் டான் சி லெங்  சிறப்பாக பதிலளித்தார்.

சிங்கப்பூரில் ஏறத்தாழ 95% மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். இதன் விகிதத்தைக் குறைப்பதே முதல் முயற்சி. அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்த விகித்ததை 30%க்கும் கீழ் கொண்டு வரும் முயற்சி அவ்வளவு எளிதல்ல….ஆனாலும் முடியாத காரியமல்ல.

தற்பொழுது  கார்பனை மறுசுழற்சி செய்யும் வகையில் அதனை கடலுக்கடியில் செலுத்தி புவி வெப்பமயமாதலைத் தடுக்க உதவும் ஆய்வுகளைப் பற்றி அறிந்துகொள்ள நார்வே செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனை இப்பொழுது ஏன் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு ஆசிய நாடுகளில் இதைக்குறித்த ஆராய்ச்சிகள் வலுப்பெற்று வருவதால் இதுவே சரியான சமயம். இந்தோனேசியா ஏற்கனவே இதுகுறித்த செயல் திட்டத்தை அறிவித்திருப்பதாகவும் சிங்கப்பூர் சார்பாக இரு நாடுகளுக்கிடையே கார்பனை எடுத்துச்செல்ல ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற நேரங்களில் சிங்கப்பூர்-ன் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சி வேகத்தை சற்று குறைக்க வாய்ப்புள்ளதா என அவரிடத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அவர் அளித்த பதிலானது,

உலகின் மற்ற நாடுகளோ  அல்லது ஆசிய நாடுகளோ தங்கள் வளர்ச்சி வேகத்தைக் குறைப்பதில்லை. பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் சந்தை நிலவரங்களில் மிக சிறிய நாடக இருப்பதை வைத்து இதுபோன்ற வளர்ச்சிகளை நங்கள் திட்டமிடவில்லை. அனைத்தையும் முழுமையாக செய்திட விரும்புகிறோம்.

சிங்கப்பூர் சிறந்த நாடாக அமைந்திருக்க காரணம் இங்கு உள்ள மக்களின் சுறுசுறுப்பான வேலை, சிறந்த செயல்பாடு போன்றவை தான். எனவே இதனையும் சிறப்பாக செய்திட தங்களால் இயலும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கொரோனா காலத்திற்கு பிறகு உலக நாடுகளின் வளர்ச்சி மற்றும் நிலவும் பொருளாதார சூழ்நிலைகளைக் குறித்து இளைஞர்கள் நம்பிக்கையற்று இருக்கலாம் “பயம் வேண்டாம் எங்களால் இயன்றவரை ஒரு சிறந்த சூழலை வரும் தலைமுறைக்கு உருவாக்க பாடுபடுவோம்” என மேலும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts