சிங்கப்பூரில் மனைவியை இழந்த நபர் ஒருவர், தனது மறைந்த மனைவியைப் போல் இருப்பதாக நினைத்து, ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று, ஒரு லிப்ட்டில் இருந்து அந்த பெண் வெளியேறியபோது அப்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படுகிறது. சிம் கா ஹ்வீ என்ற அந்த 35 வயது நபரின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 10 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் Hougang சாலையில் உள்ள குடியிருப்பில் தீ”
கடந்த அக்டோபர் 18, 2019 அன்று இரவு 7 மணியளவில் பணி முடிந்து தனது சக ஊழியர்களுடன் சிம் மது அருந்தச் சென்றதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. அவர் தனது எல்லையை மீறி மதுபானத்தை அருந்தியதாகவும் அதன் பிறகு இரவு 11 மணியளவில் டாம்பைன்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
சிம் ஹவுசிங் போர்டு பிளாக்கிற்கு அருகே நடைபாதையில் நடந்து சென்றபோது, பாதிக்கப்பட்ட அந்த 25 வயது பெண்ணைக் கவனித்துள்ளார். அந்த பெண் தனது மறைந்த மனைவியை போல காட்சியளித்த நிலையில் அவர் முதலில் திட்டமிட்டபடி தனது தாயின் வீட்டிற்குச் செல்லாமல், அந்த பெண்ணை பின்தொடர முடிவு செய்தார். பாதிக்கப்பட்ட அந்த பெண் இரவு 11.45 மணியளவில் லிப்டில் நுழைந்தார். லிப்ட்டின் கதவுகள் மூடப்படும் நேரத்தில், சிம் அவளைப் பிடித்து, அவன் உள்ளே உள்ளே நுழையும்படி லிப்ட்டின் பொத்தானை அழுத்தினான்.
லிப்ட்டின் உள்ளே, அவன் கதவுகளுக்கு அருகில் நின்றுகொன்டு, பாதிக்கப்பட்டவர் லிப்டிலிருந்து வெளியேற தன்னை கடந்து செல்லவேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் தனது தளத்தை அடைந்ததும், பாதிக்கப்பட்டவர் லிஃப்ட்டிலிருந்து வெளியேறத் முயன்றபோது சிம் அந்த பெண்ணின் பின் பகுதியை பிடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் அவ்விடத்தில் இருந்து வெளியேறி போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து சிம் கைது செய்யப்பட்டார்.